பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)125. திருநல்லூர்ப்பெருமணம்1375

உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே.                 11

திருச்சிற்றம்பலம்


என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும்.

     கு-ரை: நறும்பொழில் - நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த. காழியுள் - சீகாழியுள் அவதரித்தருளியவராகிய. ஞானசம்பந்தன் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராகிய யான். பெறும் - பெறுதற்குரிய, பதம் - பதவியை. அருளும் நல்லூர்ப் பெருமானைத்தானை - திரு நல்லூர்ப் பெருமணத்தில் எழுந்தருளிய சிவலோகத் தியாகேச மூர்த்தியை, உறும் - திருவடியில் இரண்டறக் கலக்கும். பொருளால் - கருத்தோடு. சொன்ன - பாடிய. ஒண் தமிழ் - சிறந்த பயனைத் தரவல்ல, தமிழ் - இத்தமிழ்ப் பதிகத்தை. வல்லார் - பொருள் அமைதியோடு இன்னிசையால் மனங்கசிந்து பாடவல்லார்க்குப் பழிபாவம் அறும். (அதுவன்றியும்), அவலம் - பிறவித்துன்பம். இலர் - இலராவர். “அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் எய்துவர்” என்பது குறிப்பு.

திருஞானசம்பந்த சுவாமிகள் - மூன்றாம் திருமுறை
பொழிப்புரை குறிப்புரைகளோடு நிறைவுற்றது.

பதிகங்கள் பாடல்கள்
முதல் திருமுறை 136 1469
இரண்டாம் திருமுறை 122 1331
மூன்றாம் திருமுறை 125 1347
பிற்சேர்க்கை 1 11
---- ----
ஆக 384 4158
---- ----