பிற்சேர்க்கை.
பதிக வரவலாறு:
திருவிடைவாய்த்
திருப்பதிகம் அத்தலக் கோயில் கல்வெட்டிலிருந்து
புதிதாகக் கண்டுபிடிக்கப் பெற்று திருமுறையில் சேர்க்கப் பெற்றது. கி.பி. 1917
இல் அரசாங்கத்தாரால் இக்கல்வெட்டுப் படியெடுக்கப்பெற்றுள்ளது.
இத்தலம்
தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரியிலிருந்து கூத்தாநல்லூர்
செல்லும் வழியில் உள்ளது. ஆலயத் தென்திருச்சுற்று மண்டபத்தின் சுவற்றில்
இத்தலக் கல்வெட்டைக் காணலாம். சுவாமி பெயர் புண்ணியகோடி நாதர்.
அம்பாள் பெயர் அபிராமி அம்மை.
குறிப்பு:
இத்தலத்தைச் சேர்த்தால் பாடல்பெற்ற தலங்களின் எண் 275
என்றும், திருஞானசம்பந்தரின் திருப்பதிகங்கள் 384 என்றும் ஆகும்.
இத்திருப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இந்தளப் பண்ணில் சேர்க்கத்
தக்கதாய் உள்ளது.
ப.தொ.
எண்: 384 |
|
பதிக
எண்: 126 |
திருச்சிற்றம்பலம்
4148. |
மறியார்
கரத்தெந்தை யம்மா துமையோடும் |
|
பிறியாத
பெம்மான் உறையும் இடமென்பர்
பொறிவாய் வரிவண்டு தன்பூம் பெடைபுல்கி
வெறியார் மலரில் துயிலும் விடைவாயே. 1 |
1.
பொ-ரை: மானைக் கரத்தில் ஏந்திய எந்தையாகிய பெருமான்
உமையம்மையோடு பிரியாதவராய் உறையும் இடம், புள்ளிகளை உடைய
இசைவண்டு, தன் பெண் வண்டைக்கூடி, மணம் பொருந்திய மலரில் துயிலும்,
திருவிடைவாய் என்பர். பிரியாத என்பது எதுகை நோக்கி வல்லெழுத்தாகத்
திரிந்தது.
|