4149. |
ஒவ்வாத
என்பே யிழையா வொளிமௌலிச் |
|
செவ்வான்
மதிவைத் தவர்சேர் விடமென்பர்
எவ்வா யிலுமே டலர்கோ டலம்போது
வெவ்வா யரவம் மலரும் விடைவாயே. 2 |
4150. |
கரையார்
கடல்நஞ் சமுதுண் டவர்கங்கைத் |
|
திரையார்
சடைத்தீ வண்ணர்சேர் விடமென்பர்
குரையார் மணியுங் குளிர்சந் தமுங்கொண்டு
விரையார் புனல்வந் திழியும் விடைவாயே. 3 |
4151. |
கூசத்
தழல்போல் விழியா வருகூற்றைப் |
|
பாசத்
தொடும்வீ ழவுதைத் தவர்பற்றாம்
வாசக் கதிர்ச்சா லிவெண்சா மரையேபோல்
வீசக் களியன் னமல்கும் விடைவாயே. 4
|
4152. |
திரியும்
புரமூன் றையுஞ்செந் தழலுண்ண |
|
வெரியம்
பெய்தகுன் றவில்லி யிடமென்பர் |
2.
பொ-ரை: யாவரும் ஏலாத என்பையே மாலையாகப் பூண்டு
இளம்பிறையைச் சிவந்த ஒளி பொருந்திய சடைமுடிமீது, செவ்வான் மீது
பிறை தோன்றுமாறு போலச் சூடிய, சிவபிரானது இடம், எவ்விடத்தும் இதழ்
விரிந்து விளங்கும் காந்தள் மலர்கள் கொடிய வாயினை உடைய பாம்புகளின்
படங்கள் போல மலரும், திருவிடைவாய் என்பர்.
3.
பொ-ரை: கரையின் கட்டுப்பட்டிலடங்கிய கடலில் தோன்றிய
நஞ்சை அமுதாக உண்டவரும், கங்கையாற்றைச் சூடியவரும்,
தீவண்ணருமாகிய சிவபெருமானது இடம், ஒலிக்கும் நவமணிகளையும் சந்தன
மரங்களையும் கொண்டு விரைந்து வரும் ஆற்றின் நீர் நிறையும்,
திருவிடைவாய் என்பர்.
4.
பொ-ரை: கண்டார் கண்கூசுமாறு தழல் போல் விழித்துவந்த
கூற்றுவனை, பாசக் கயிற்றோடும் உதைத்த சிவபெருமானது இடம், மணம்
பொருந்திய கதிர்களை உடைய நெற்பயிர் வெண்சாமரை போலவீச, அன்னம்
மகிழ்வோடு உடையும் திருவிடைவாய் என்பர்.
5.
பொ-ரை: வானகத்தே திரிந்த திரிபுரங்கள் செந்தழலுண்ணுமாறு
அம்பெய்த, குன்றவில்லியாகிய சிவபெருமானது இடம், மலை போன்ற
மாளிகைகளின் சூளிகைகளில் கட்டப்பெற்று விரிந்தசையும்
|