|
நாதர் கோயில்.
இக்கோயிலில் இம்மன்னனது கல்வெட்டுகள் வடமொழியில்
உள்ளன. மன்னனுக்கு இறைவன் அசரீரியாக உணர்த்தினான் என்று
கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.1 எண்ணற்ற எதிரிகளைத் துகளாக்கிய
இம்மன்னன் சைவ சித்தாந்தப் பாதையில் நின்றவன் என்றும்
கூறப்பட்டுள்ளது. இவனது வீரத்தையும், சிவபக்தியையும் கூறும்
இவ்வடமொழிக் கல்வெட்டுகள் மிக விரிவானவை.2 இடமின்மையால்
விரிவுக்கு அஞ்சி விடுகின்றேன்.
பெரிய
புராணத்தில் கழற்சிங்க நாயனார் புராணத்தில் கூறப்படும்
பல்லவனும் வடபுல மன்னர்களை வென்றவன் என்றும், சிவபக்தி கொண்டு
சிவதர்மங்களும் தொண்டுகளும் செய்தவன் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவையாவும் ராஜசிம்மனுடைய கல்வெட்டுகளில் - வடமொழிக்
கிரந்தங்களில் விரிவாய்ச் சொல்லப்பட்டுள்ளன.
சுந்தரர்
பூசலார் நாயனாரையும் குறிப்பிடுகின்றார். பூசலார் நாயனாரின்
வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் விரிவாக எடுத்துரைப்பார். பூசலார்
அவதரித்த திருத்தலம் திருநின்றவூர். அவர் சிவபெருமானுக்குக்
கோயிலெடுக்க நினைத்தார். ஆனால் அவரிடம் பொருள் இல்லை. ஆகவே
தன் மனத்திலேயே சாத்திர விதிப்படி கோயில் அமைத்தார். மனதில்
கட்டியகோயிலுக்குக் கடவுள் மங்கலம் என்னும் மருந்து சாத்துதல்,
குடமுழுக்கு விழா ஆகியவற்றுக்கு நன்னாள் அமைத்தார்.
இஃது
இவ்வாறு இருக்க, காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் கச்சிக்
கற்றளி எடுத்தான். இறைவன் திருமேனியைத் தாபிக்கவும் நாள் வகுத்தான்.
ஆனால் அதற்கு முதல் நாள் இறைவன் மன்னனின் கனவில் தோன்றி
"நின்றவூர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த நன்றுநீடு
ஆலயத்து நாளை யாம் புகுவோம். நீ உன்னுடைய நாளை மாற்றி
அமைத்துக்கொள்" என்று அருளினார்.
மன்னனும்
மறுநாள் பூசலாரைக் கண்டு வணங்கி இறைவன் கனவில்
உரைத்ததைக் கூறினான். பூசலாரும் தாம் மனதில் கோயில் கட்டியதையும்,
குட முழுக்கு விழாவிற்கு அன்றுதான் நன்னாளாக
1
South Indian Inscriptions - Tamil and Sanskrit - Volume 1
Page 14 Line 7.
2
Above Volume Page 8 to 22.
|