|  
        
        உமூன்றாம் திருமுறையில் உள்ள
 
 தலங்களின்
 
 வரலாற்றுக் குறிப்புக்கள்
 1. 
        திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்       பெருந்திருக்கோயில் 
        என்பது யானை ஏற முடியாதவாறு படிக்கட்டுக்கள் அமைத்துச் செய்குன்றுபோல் கட்டப்பெற்றதாகும். இது
 மாடக்கோயில் என்றும் வழங்கப்பெறும். (நன்னிலத்துப் பெருங்கோயில்,
 வைகல் மாடக்கோயில் இவைகளின் அமைப்பு முறைகளை நோக்குக)
 இத்தகைய கோயில்கள் கோச்செங்கட் சோழநாயனாரால் கட்டப்பெற்றன.
       சைவசமய 
        குரவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் காலத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) இவ்விதக்கோயில்கள் எழுபத்தெட்டு இருந்தன.
 இச்செய்தி பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் உறையும் பெருங்கோயில்
 எழுபதினோடெட்டும் என்னும் அவரது க்ஷேத்திரக் கோவைத்
 திருத்தாண்டகப் பதிக அடிகளால் விளங்குகிறது. இங்ஙனம் கோச்செங்கட்
 சோழநாயனாரால் கட்டப்பெற்றவைகளுள் அம்பர்ப்பெருந் திருக்கோயிலும்
 ஒன்றாகும்.
       இச்செய்தியை 
        ஞானசம்பந்தப் பெருந்தகையார் குரிசில் செங்கண்ணவன் கோயில், செங்கண் நல்லிறை செய்த கோயில், செம்பியர்
 செறிகழல் இறை செய்த கோயில் என இவ்வூர்ப்பதிக அடிகளில்
 கூறியுள்ளனர். எனவே அம்பர் என்னும் ஊரில் யானை ஏற முடியாதவாறு
 படிக்கட்டுக்கள் அமைத்துச் செய்குன்றுபோல் கோச்செங்கட் சோழ
 நாயனரால் கட்டப்பெற்ற காரணம் பற்றி அம்பர்ப் பெருந்திருக்கோயில்
 என்னும் பெயர் பெற்றது.
       இது 
        பூந்தோட்டம் தொடர் நிலையத்திற்குக் கிழக்கே 5 கி.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத்திற்குக் கிழக்கே, 1 கி.மீ.
 தூரத்திலிருக்கிறது. காவிரியின் தென்கரைத் தலங்களுள் 54ஆவது ஆகும்.
 பூந்தோட்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.
       இறைவரின் 
        திருப்பெயர்-பிரமபுரிநாதர். இறைவியின்  |