திருப்பெயர்-பூங்குழல்நாயகி.
தீர்த்தம்-பிரம தீர்த்தம். மரம்-புன்னை.
இது
சோமாசி மாற நாயனார் அவதரித்த திருப்பதி. இத்தலத்தை
ஞானசம்பந்தர் மாத்திரமே பாடியிருக்கின்றனர். அவருடைய பதிகமும் ஒன்று
மட்டுமே.1
அரிசிலம்
பொருபுனல் அம்பர், (அரிசில்-அரிசிலாறு) அறைபுனல்
நிறைவயல் அம்பர், அங்கணி விழவமர் அம்பர், பைம்பொழில் நிழல்வளர்
நெடுநகர் என்னும் ஞானசம்பந்தரது திருப்பதிக அடிகளால் இவ்வூரின்
சிறப்பு நன்கு விளங்கும்.
மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இத்தலத்திற்குப்
புராணம் பாடியுள்ளார்.
கல்வெட்டு:
இத்திருக்கோயிலில்
நான்கு கல் வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றுள்
சோமாஸ்கந்தர் கோயிலில் இருக்கும் இராஜராஜ தேவரின் பத்தாமாண்டுக்
கல்வெட்டு நீங்கலாக ஏனையவை துண்டு துண்டான கற்களில்
வெட்டப்பெற்றனவாகும். மேற்குறித்த இராஜராஜ தேவரின் கல்வெட்டு
உய்யக்கொண்டார் வளநாட்டு, அம்பர் நாட்டு வைகாவூராகிய எதிரிலிச்
சோழநெற்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் எதிரிலிச்சோழீச்சர முடையார்க்கு
அம்பர் என்னும் இவ்வூரிலுள்ள ஒரு வணிகன் இரண்டு விளக்குகள்
கொடுத்ததைத் தெரிவிக்கின்றது.
ஏனைய
துண்டுக் கல்வெட்டுக்கள் இராஜராஜ தேவரின் ஐந்து,
ஒன்பது இராச்சிய ஆண்டுகளில் நிலங்கள் ஏலத்திற்கு விடப்பட்டதையும்,
மூன்றாங்குலோத்துங்க சோழன் மதுரையும், ஈழமும், கருவூரும், பாண்டியன்
முடித்தலையும் கொண்டதையும், அம்பர் நாட்டில், மேலூராகிய
அரித்துவநெற்குன்றம் என்னும் ஊர் உள்ளதையும் தெரிவிக்கின்றன.2
1
அரசிலாறு
2
See the Annual Reports on South Indian Epigraphy for the
year 1917. Numbers 236-239.
|