பக்கம் எண் :

182தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

     7. தியாகராசப் பள்ளு:- இதை ஆக்கியோர் பதினாறாம் நூற்றாண்டில்
விளங்கியிருந்த கமலைஞானப்பிரகாசர் ஆவர்.

     8. திருவாரூர்ப் பன்மணிமாலை:- இலக்கண விளக்கம் இயற்றிய
திருவாரூர் வைத்தியநாததேசிகரால் ஆக்கப்பெற்றது.

     9. திருவாரூர் ஒரு துறைக்கோவை:- இது வெறிவிலக்கு என்னும் ஒரு
துறையை வைத்துக்கொண்டு நானூறு பாடல்களால் ஆக்கப்பெற்றதொரு நூல்.
இதன் ஆசிரியர் கீழ்வேளூர்க் குருசாமி தேசிகர் என்பர்.

     10. திருவாரூர்க் கோவை:- இது எல்லப்ப நயினார் என்னும் புலவரால்
பாடப்பெற்ற சொற்சுவை பொருட்சுவை நிரம்பிய நூல்.

     11. கமலாம்பிகை பிள்ளைத்தமிழ்:- தருமை ஆதீனத்து அடியார்
கூட்டங்களில் ஒருவராய் விளங்கியிருந்த சிதம்பர முனிவரால்
இயற்றப்பெற்றது.

     இவைகளன்றித் திருவாரூர் மாலை, கமலாம்பிகை மாலை முதலான
நூல்களும், காளமேகப்புலவர் முதலானோரின் தனிப்பாடல்களும்
இருக்கின்றன.

     கமலாலயத்தின் வடகிழக்கு மூலையில் மாற்றுரைத்த பிள்ளையாரின்
திருக்கோயில் இருக்கின்றது. “திருவாரூர்த் தேரழகு” என்னும் உலக வழக்கு
இவ்வூர்த் தேரின் சிறப்பைத் தெரிவிப்பதாகும்.

தலப்பெருமையை விளக்கும் புராணப்பாடல் ஒன்று பின் வருமாறு:- 

திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா
ஒருவனே ழடிநடந்து மீண்டிடின் ஒப்பில் காசி
விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால்
இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ.

    
                    - திருவாரூர்ப் புராணம் தலமகிமைச் சுருக்கம்.

கல்வெட்டு:

     இத்திருக்கோயிலில், பிற்காலச் சோழ மன்னர்களுள்,