பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்189

     இது நரசிங்கன்பேட்டை தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்
கிழக்கே 1.5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது காவிரித் தென்கரைத்
தலங்களுள் முப்பத்தாறாவது தலம். இத்தலம் மயிலாடுதுறை-கும்பகோணம்
பேருந்து வழியில் திருவாலங்காட்டை அடுத்துள்ளது.

     பிள்ளையார் 1. துணைவந்தபிள்ளையார். 2. அழகிய பிள்ளையார்.
இறைவரின் திருப்பெயர் மாசிலாமணியீசுரர். இவரே கர்ப்பஇல்லில்
எழுந்தருளியிருப்பவர். அணைத்தெழுந்தநாயகர்; இவர் உமாதேவியை
அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர். திருவிழுாவின் முடிவில் கோமுத்தி
தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவர் இவரே. செம்பொன் தியாகர்:
முசுகுந்தச்சக்கரவர்த்திக்கு இறைவர் திருவாரூர்த் தியாகராசராகக் காட்சி
காட்டியருளியமையால் இவர்க்கு இங்கே தனிச் சந்நிதி இருக்கிறது. இவர்
வீரசிங்காதனம் உடையவர். இவரது நடனம் சுந்தர நடனம்.
திருவிழாக்காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர் இவரேயாவர்.

     இறைவியின் திருப்பெயர் ஒப்பிலாமுலையம்மை. இத்திருப்பெயர்
சுந்தர மூர்த்திநாயனாரால் ‘ஒப்பிலா முலையாள் ஒரு பாகா’ என்று இவ்வூர்ப்
பதிகத்தில் எடுத்து ஆளப்பெற்றுள்ளது. தீர்த்தங்கள் கோமுத்தி தீர்த்தம்,
பத்மதீர்த்தம், கைவல்யதீர்த்தம் என்பன. இவை முறையே திருக்கோயிலுக்கு
எதிரிலும், கொங்கணேசுவரர் கோயிலின் பக்கத்திலும், திருக்காவிரியிலும்
இருக்கின்றன.

     மரம் அரசு. இது படர்ந்து விளங்குதலால் படர்ந்த அரசு என்றும்
வழங்கப்பெறும். சபை போதி அம்பலம். தேவர்களும் முனிவர்களும் செய்த
வேண்டுகோளுக்கு இரங்கி இவ்வரசமரத்தின் நிழலில் அமர்ந்த அம்பலத்தில்
இறைவர் தாண்டவம் புரிந்தமையால் இப்பெயர் பெற்றது.(போதி - அரசமரம்.)
நந்தி தருமநந்திதேவர். தலத்திற்கு வழங்கும் வேறுபெயர்கள்:- கோமுத்தி,
கோகழி, நவகோடிசித்தபுரம் முதலியன.

     முசுகுந்தமன்னனுக்கு மகப்பேறு அளித்தது; தரும தேவதையை
இடபவாகனமாகக் கொண்டதன்றிச் சந்நிதியில் அரசமரத்தில் நிழலில்
கோயில்கொண்டு இருக்கும்படி அருளியது; திருஞானசம்பந்த சுவாமிகளுக்குப்
பொற்கிழியளித்தது; திருமூலநாயனாரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய
திருமந்திரத்தை வெளிப்படுத்தத் திருவருள் புரிந்தது; போகர் முதலிய
சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளியது முதலியவை இப்பதியில்