|
ஊர்கள் எனக் கல்வெட்டுக்கள்
அறிவிக்கின்றன.
பிற
செய்திகள்:
அர்த்தமண்டபத்தின்
வடபுறச் சுவரில் அதாவது துர்க்கா
பரமேசுவரியின் திருமேனிக்குக் கிழக்குப் பக்கமாக உள்ளதும், சில
பகுதிகளை சுவரில் வைத்துக் கட்டப்பெற்றதும் ஆகிய கல்வெட்டில்,
கோப்பரகேசரிவன்மரான உடையார் காவேரிகரைகண்ட கரிகால சோழ
தேவர் என்று ஒரு சோழ அரசர் குறிக்கப்பெற்றுள்ளனர். இக்கல்வெட்டில்
தொடக்கத்தில் தேவற்குயாண்டு நாலாவது தென்கரை திருவழுந்தூர் நாட்டு
வாய் தலைப்படி குலையரையரோம் உடையார் திருவாவடுதுறை
உடையார்க்கு நாங்கள் கைதீட்டு இட்டுக் கொடுத்த பரிசாவது எனக்
குறிக்கப்பெற்றுள்ளது. இதில் வாய் தலைப்படி குலையரையர் என்பவர் ஒரு
சபையினர் என்பது உறுதி, அவர்கள் எவ்வேலையைக் கண்காணித்துவந்தனர்
என்பது புலப்படவில்லை. இக்கோயிலுள்ள பொன் ஆபரணங்கள் குடிஞைச்
கல்லாலும், வெண்கல உருக்கள் வெள்ளிக் கோலாலும், பித்தளை உருக்கள்
மாண்டினாலும் நிறுக்கப்பெற்று வந்தன. வெள்ளிக் கோலால் நிறை
ஆயிரத்து நாநூற்று இருபத்து முப்பலவரை, மேற்படி கோலால் நிறை
தொளாயிரத்திருபத்தைம்பலநே கைசு (கஃசு) என்னும் தொடர்களால்
அக்காலத்தில் பலம் தான் உயர்ந்த நிறுத்தல் அளவை என்பதும் கஃசுதான்
மிகச் சிறியது என்பதும் பெறப்படுகின்றன.
கோயில்காரியங்களின்
பொருட்டு ஊர்ச்சபையார், திருவாவடுதுறை
உடையார் கோயில் வட பக்கத்து உலகளந்தான் என்று பேர் கூவப்பட்ட
மாடத்தில் கூட்டங் குறைவறக் கூடியிருந்தும், சங்கர தேவன் மண்டபத்தே
கூட்டங் குறைவறக் கூடியிருந்தும் கவனித்து வந்தனர்.
சாத்தனூர்க்கு
ஸ்ரீ சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் வழங்கி வந்ததாக
முதலாம் இராஜேந்திர சோழதேவரின் கல்வெட்டில் குறிக்கப்
குறிப்பு:
திருவாவடுதுறை ஆதீனத்தில் இருபத்தொன்றாம் பட்டத்தில் இனிது
எழுந்தருளி அருளாட்சி நடத்திய ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய
சுவாமிகளின் கட்டளைப்படி இக்கோயில் கல்வெட்டுக்களைப் படி எடுத்து
எழுதி, அங்குக் குருபூசை விழாவில் ஆற்றிய சொற்பெருக்கின் சுருக்கமே
இங்குக் கொடுக்கப் பெற்றுள்ளது.
|