|
மேல் இருக்கிறது.
கூத்தனூர் கொடியாலம் என்றால் கூத்தனூருக்கு அருகில்
உள்ள கொடியாலம் என்ற பொருளில்தான் இங்கும் அமைந்துள்ளது.1
திருமுதுகுன்றம்
கல்வெட்டில் நெற்குப்பைத் திருமுதுகுன்றம்
உடையார்க்கு எனக் குறிக்கப்பெற்றுள்ளது. ஊரின் பெயர் நெற்குப்பை.
கோயிலின் பெயர் திருமுதுகுன்றம் என்று பொருள் படுமா? அங்ஙனமாயின்
சைவசமய குரவர்கள் துன்னார் கடந்தையுள் தூங்கானைமாடச்
சுடர்க்கொழுந்தே கொள்ளிடக்கரை கோவந்த புத்தூரில்
வெள்விடைக்கருள்செய் விசயமங்கை உள்ளிடத்து உறை நின்ற உருத்திரன்
என ஊரையும் கோயிலையும் குறிப்பிட்டுள்ளனரே. ஊரின் பெயர்கள்
சாத்தனூர், நெற்குப்பை. அங்குள்ள கோயிலின் பெயர்கள் திருவாவடுதுறை,
திருமுதுகுன்றம் எனக்குறிப்பிடாமைக்குக் காரணம் என்னை? வரலாற்றுப்
பேராசிரியாராகிய சேக்கிழார் பெருந்தகையராவது குறிப்பிட்டிருக்க
வேண்டும்! அங்ஙனம் குறிப்பிடாமையால் ஊரின் பெயர் சாத்தனூர்
என்பதும், அங்குள்ள கோயிலின் பெயர் திருவாவடுதுறை என்பதும்
பொருத்தமுடையது ஆகாது. சாத்தனூர் திருவாவடுதுறைக்குத் தெற்கே
இரண்டு மைலுக்கு மேற்பட்ட தூரத்தில் இன்றும் தனியூராக விளங்கி
வருகின்றது.
திருவாவடுதுறையைத்
தன்னகத்துக்கொண்ட வளநாடு:
இவ்வூரைத்
தன்னகத்துக்கொண்ட வளநாடு உய்யக் கொண்டார்
வளநாடாகும். இந்நாடு காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடைப்பட்ட
நிலப்பரப்பை உடையது. இது ஆக்கூர்நாடு, அம்பர்நாடு, குறும்பூர்நாடு,
மருகல்நாடு, பாம்பூர்நாடு, தென்கரைத் திரைமூர்நாடு, திருநறையூர்நாடு,
திருவழுந்தூர்நாடு, வெண்ணாடு, விளநாடு, பேராவூர்நாடு என்னும் பிரிவுகளை
உடையதாய் இருந்தது.
திருவாவடுதுறையைத்
தன்னகத்துக்கொண்ட நாடு:
திருஆவடுதுறை
உய்யக்கொண்டார் வளநாட்டின் பிரிவுகளில் ஒன்றாய
தென்கரைக் திரைமூர்நாட்டிற்கு உட்பட்டதாகும். நெற்குப்பை, சாத்தனூர்,
நடார், நல்லுச்சேரி, திருக்குரங்காடுதுறை, மகேந்திரமங்கலம் என்னும்
ஊர்கள் இந்நாட்டிற்கு உட்பட்ட சில
1
See the South Indian Inscriptions. Volume II. Part V.
|