பக்கம் எண் :

198தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

இந்நிகழ்ச்சி முதலாம் இராஜேந்திரசோழனது நான்காம் ஆண்டில்
நிகழ்ந்ததாகும்.

     திருவாவடுதுறை என்பது ஊரின் பெயரா? அல்லது கோயிலின்
பெயரா?

     திருவாவடுதுறைக் கல்வெட்டுக்களில் “சாத்தனூர் பிர்மதேயம் ஸ்ரீய்
சதுர்வேதிமங்கலத்து ஸ்ரீ திருவாவடுதுறை உடையார் கோயில் தென்கரை
திரைமூர்நாட்டு பிர்மதேயம் சாத்தனூர் திருவாவடுதுறை உடைய
ஆழ்வார்க்கு”, எனக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் பின்னதைப் பற்றிக்
கல்வெட்டுத் துறையாளர் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டபொழுது, “
Thiruvavaduthurai at Sattanur” என எழுதியுள்ளனர். இவ் ஆங்கில
மொழி பெயர்ப்பைக் கொண்டு ஊரின் பெயர் சாத்தனூர். அங்குள்ள
கோயிலின் பெயர் திருவாவடுதுறை எனக் கூறுவாருமுளர். அது
பொருந்துவது அன்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஐயன்பேட்டை என்னும்
பெயருடைய ஊர்கள் மூன்று இருக்கின்றன. அவைகளை மக்கள்
குறிப்பிடும்பொழுது வழுத்தூர் ஐயன்பேட்டை, மனைக்கால் ஐயன்பேட்டை,
காட்டூர் ஐயன்பேட்டை எனக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு கூறுவதால்
வழுத்தூருக்கு அருகில் உள்ள ஐயன்பேட்டை மனைக்காலுக்கு அருகிலுள்ள
ஐயன்பேட்டை என்று பொருள்படுமேயொழிய, வழுத்தூரில் ஐயன்பேட்டை
இருக்கிறது என்று பொருள்படாது. அஃதேபோன்று சாத்தனூர்
திருவாவடுதுறை என்றால் சாத்தனூருக்கு அருகில் உள்ள திருவாவடுதுறை
என்று பொருள்படுமே ஒழிய ஊரின் பெயர் சாத்தனூர் என்றும் அங்குள்ள
கோயிலின் பெயர் திருவாவடுதுறை என்றும் பொருள்படாது. சிறப்புள்ள
ஊரைச் சொல்லி அதற்கு அண்மையில் உள்ளது என்று கூறுவது மரபாகும்.

     திருவாவடுதுறைக் கோயிலிலுள்ள ‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்
சக்கரவர்த்திகள் கோனேரின்மைகொண்டான்’ எனத் தொடங்கும் விக்கிரம
பாண்டியன் கல்வெட்டில் காணப்பெறும், துறைசையார் அகரமான
இராஜேந்திரசோழச் சதுர்ப்பேதிமங்கலத்துப் பிடாகை கூத்தனூர்
கொடியாலத்து விட்ட நிலம் பதிற்றுவேலியும் என்னும் கல்வெட்டுப்
பகுதியால் கூத்தனூர் கொடியாலத்தில் நிலம் அளித்த செய்தி
பெறப்படுகின்றது. கூத்தனூர் கொடியாலம் இவை இரண்டும்
திருவாவடுதுறைக்கு வடக்கே சுமார் 4.5 கி.மீ. தூரத்தில் இருக்கின்றன.
இந்த இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் 2 கி.மீ. தூரத்திற்கு