பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்205

தேவரின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டினால் இக்கோவிலுக்கு இருபது
காவலாளிகள் இருந்தனர் என அறிகின்றோம். இக்கல்வெட்டில்
பிணைத்தீட்டு (ஜாமீன்) என்ற பெயர் உளது.

     மகாதேவ தீட்சிதர் மகன் சதாசிவ மகின் (தீட்சிதர்) காவை நூல்கள்
எனப் பல எழுதினார்1. திருவானைக்காவிலுள்ள நஞ்சை நிலங்களை
அளந்தகோல் சிவநாமத்திரேயம் என்னும் பெயர் பூண்டதாய் நான்கு அடி
நீளமுள்ளதாய் இருந்தது. அகிலாண்ட ஈஸ்வரி கோயில், ஜம்புநாதர் கோயில்
இவைகளின் தளவரிசைகளைச் செய்தவர் பாஸ்கரராயபாரதி தீட்சிதர் ஆவர்.
கோப்பு ஒன்றிற்குச் சிலந்தியைச் சோழனாக்கினான் என்னும் பெயரும்
பட்டன் ஒருவனுக்கு என்னானைக் கன்று என்ற பெயரும் வைக்கப்
பெற்றிருந்தன. என்னானைக் கன்று என்னும் பெயர் இவ்வூர்த்
திருத்தாண்டகத்திலும் கூறப் பெற்றுள்ளது.

     விஜயரங்க சொக்கநாத நாயகருடைய நாடகசாலை ஆசிரியர்
வைத்தியப்ப ஐயா, ஜம்புதீர்த்த மண்டபத்திற்குப் படித்துறைகள்
கட்டியுள்ளார்.

     சங்கரமகா தேவர்க்கு இவ்வூரில் மடம் இருந்தது. நாற்பத்
தெண்ணாயிரவர் என்னும் பெயருள்ள மற்றொரு மடமும் இருந்தது. அதில்
துறவிகட்கு அன்னம் அளிக்கப்பட்டுவந்தது. 1

9.திருஇராமேச்சுரம்

     இராவணனைக் கொன்ற பெரும் பழி நீங்கும் பொருட்டு
இராமபிரானால் எழுந்தருளுவித்து வழிபடப்பெற்ற கோயில் ஆதலால்
இப்பெயர் பெற்றது. (இராம+ஈச்சுரம்=இராமேச்சுரம். ஈச்சுரம்=கோயில்.)
இச்செய்தி "தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன், பூவியலும்
முடிபொன்றுவித்த பழிபோயற, ஏவியலுஞ் சிலையண்ணல் செய்த இராமேச்
சுரம்" என்னும் இப்பதிக்குரிய ஞானசம்பந்தர் தேவார அடிகளால் இனிது
விளங்குகின்றது. சேக்கிழாரும் "சேதுவின் கண் செங்கண்மால் பூசைசெய்த
சிவ பெருமான்றனைப்பாடி" எனக் கூறியுள்ளார்.

     இராமேச்சுரம் தொடர் வண்டி நிலையத்திற்கு 1.5 கி,மீ.


     1திருவானைக்கா, திருவாவடுதுறை ஆதீன வெளியீடு.