பக்கம் எண் :

206தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

தொலைவில் உளது.பாண்டி நாட்டுத் தலங்களுள் இது எட்டாவது ஆகும்.
கீழ்க்கடற்கரையில் அமைந்த இத்தலத்திற்கு தமிழ் நாட்டின் அனைத்துப்
பெருநகர்களிலிருந்தும் பேருந்துகள் உள்ளன. பேருந்துக் கடற்பாலம்
கட்டியபிறகு ஆலயம் வரை பேருந்துகள் செல்லும்.

     இறைவரின் திருப்பெயர்-இராமநாதர். இராமேச்சுரத்தில்
எழுந்தருளச்செய்வதற்காகச் சிவலிங்கம் கொண்டுவரக் காசிக்குச் சென்ற
அநுமார் திரும்பிவரக் காலந்தாழ்த்தமையால், சீதாபிராட்டியார் மணலால்
குவித்துச் செய்த இலிங்கத்தை இராமபிரான் பூசித்தார். அவரே இராமநாதர்
எனப் பெயர்பெறுவர். அநுமான் கொண்டுவந்த இலிங்கத்தை மூலலிங்கத்தின்
வடபால் எழுந்தருள்வித்தார். அவரே விசுவலிங்கம் எனப் பெயர்பெறுவர்

.      இறைவியாரின் திருப்பெயர்-மலைவளர் காதலி. இத்திருப்பெயரை
ஞானசம்பந்தப்பெருந்தகையார் "ஒரு பாகம் மலைவளர் காதலி பாட
ஆடிமயக்கா" என எடுத்து ஆண்டிருக்கின்றார். தீர்த்தம்-அக்நி தீர்த்தம்,
ராம தீர்த்தம், இலக்குமண தீர்த்தம், தனுக்கோடி முதலியன.

     இது சோதி லிங்கத் தலங்கள் பன்னிரண்டனுள் ஒன்றாகும்.
இப்பதிக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, அப்பர் பதிகம் ஒன்று,
ஆக மூன்று பதிகங்கள் இருக்கினறன.

     இத்தலத்தைப்பற்றி "மறவாளிலங்கையிறைமகனை உதைத்த பழியால்
மருண்டு, அரி யன்று அறவாள் நேமியளித்தவனை யருச்சித்தகன்ற
அணிநகர்" எனப் பரஞ்சோதியார், திருவிளையாடற் புராணம்
அருச்சனைப்படலத்தில் கூறியுள்ளார்.

     இலங்கைக்குச் செல்ல இராமபிரான் அணைகட்டிய இடம் சேது
என்னும் பெயர்பெறும். அங்கே இராமபிரான் தன் வில்லின் முனையால்
தோண்டிய தீர்த்தம் தனுக்கோடியாகும்.

     இராமேச்சுரத்திலிருந்து தெற்கே 18 கி.மீ. தூரத்தில் தனுக்கோடி
இருக்கின்றது. சேது ஸ்நானம் செய்பவர்கள் இங்குத்தான் செய்தல் வேண்டும்.
இத்தீர்த்தத்தில் நீராடச் செல்பவர்கள், தனுக்கோடி தொடர் வண்டி
நிலையத்திலிருந்து செல்லுதல் நல்லது. அங்கிருந்து அதன் தூரம் 3 கி.மீ.
தூரமாகும்.

     இத்தலத்திற்கு நிரம்ப அழகிய தேசிகரால் பாடப்பெற்ற