|
சேதுபுராணம் அச்சிடப்பெற்றுள்ளது.
"நீடுதநுக்கோடியினை
நினைந்தாலும், புகழ்ந்தாலும், நேர் கண்டாலும்
வீடுபெற லெளிதாகும்" (சேதுபுராணம், தனுக்கோடிச் சருக்கம்) என்னும்
அடிகள் இத்தனுக்கோடியின் பெருமையினை விளக்குவதாகும்.
கல்வெட்டு:
இத்திருக்கோயிலில்
பாண்டிய மன்னர்களில் வீரபாண்டிய தேவன்,
திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன் இவர்கள் காலங்களிலும்,
விசயநகர மன்னர்களில் விசுவநாத நாயக்கர் வீரப்ப நாயக்கர் காலங்களிலும்,
வீரபூபதி காலத்தும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இவைகள்
சகம் 1530 அதாவது கி.பி. 1608 இல் வீரபூபதி நாளில்
இராமநாதர் கோயில் கட்டி முடிந்ததையும்; சகாப்தம் 1540 இல் அதாவது
கி.பி. 1618இல் சேதுபதிகாத்த தேவர் புத்திரன் தளவாய் தேவன்
குலசேகரனான சேதுபதிகாத்த தேவர், இறைவர் திருவிழாவிற்கு
எழுந்தருளியிருக்க மண்டபம் ஒன்றைக் கட்டியதையும், சகாப்தம் 1540இல்
சேதுபதிகாத்த தேவர் இராம நாதசுவாமி கோயிலின் முதற் பிரகாரம்,
திருநடமாளிகைப்பத்தி, ஆருட மண்டபம் கட்டியதையும், சகம் 1390
அதாவது 1468இல் பருவதவர்த்தினி அம்மன் கோயிலின் முன்புள்ள
கொடிமரம் செய்து நிறுத்தி வைக்கப்பெற்றதையும் உணர்த்துகின்றன.
கன்னடத்தில்
சோபகிருது வருடத்தில் செதுக்கப்பெற்ற கல் வெட்டு
ஒன்று கற்கள் பதித்த கவசம் ஒன்றை அளிக்கப்பெற்றதையும்
உணர்த்துகின்றது1.
1See
the Annual Reports on South Indian Epigraphy for the
year 1903 Numbers 97-105, year 1905 Numbers 89-90, year 1915
Numbers 8-9.
See
also South Indian Inscriptions, Vol. VIII Numbers 3823-91.
|