பக்கம் எண் :

208தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

          1இக் கோயிலிலுள்ள கல்வெட்டுப் பாடல்கள்:
                        (கட்டளைக் கலித்துறை)

(1) சேல்கண்ட வாரி யிலிங்கேசற் செய்பழி தீரமுன்னாள்
மால்கண்ட கோயி லிராமீச ராடல்செய் மண்டபத்தை
நூல்கண்ட நற்சக னாயிரத் தோடைந்து நூற்றிருபான்
மேல்கண்ட நாளின் முனிராம நாதன் விதித்தனனே.
(2) திருமா லரனுக் கபிடேகஞ் செய்யச் சிலையதனால்
வருமாறு கண்டவன் கோடிப் புனற்கு மகாலயத்தைத்
தருமாயி ரத்தைந்து நூற்றுமுப் பான்செல் சகன் வருடத்
தருமா தவம்செய் முனிராம நாதன் அமைத்தனனே.
(3) பற்றுஞ் சகனிற் பதினைந்து நூற்றுமுப் பான்மருவ
நற்றும் புவியினை யாள்வீர பூபதி நாளிற் றொண்டர்
குற்றங் கடிந்த வரராம நாயகர் கோயிலன்பான்
முற்றுந் தவங்கள் புரிராம நாதன் முடித்தனனே.

10.திருஇன்னம்பர்

     இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் பெருவழியில்
இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும்
வழியில் 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. காவிரியின் வடகரைத் தலங்களுள்
45 ஆவது தலம்.

     இறைவரின் திருப்பெயர்:-(1) தான்தோன்றியீசர் (2)எழுத்தறிந்த நாதர்.
இப்பெயர், அப்பர்பெருமானால் இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப்
பெற்றுள்ளது. இறைவியின் திருப்பெயர்-கொந்தார் பூங்குழல் அம்மை.
தீர்த்தம்-ஐராவத தீர்த்தம். ஞாயிறு, அகத்தியர், ஐராவதம் வழிபட்டுப்
பேறுபெற்ற தலம். இப்பதிக்குத் திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்று,
திருநாவுக்கரசர் பதிகம் என ஐந்து பதிகங்கள் இருக்கின்றன.


     1see the Annual Reports on South Indian Epigraphy for the
year 1927. Numbers 321-322.