|
அறியக்கிடக்கின்றது.
இங்குக்
குறிப்பிடப்பெற்ற பிள்ளைப் புரோசைக்குடையார் என்பவர்
மூன்றாம் இராஜராஜ சோழனின் இரண்டாவது மகனாவார். எனவே அம்மனை
இக்கோயிலில் எழுந்தருளுவித்தவர் பிள்ளை புரோசக்குடையார் ஆவர்.
இறைவன்கோயிலில் ஒருபகுதியைத் திருப்பணி செய்வித்தவர்:-
எழுபத்தொன்பது நாட்டுப்பதினெண் பூமிக்காரரான கற்பகப்பிள்ளையார்
ஆவர். மேற்குறித்த கற்பகப் பிள்ளையாரே யன்றி ஆண்டார் பிரசன்ன
தேவரும் சில திருப் பணிகளைப் புரிந்துள்ளனர்.
எழுந்தருளுவிக்கப்பெற்ற
திருமேனிகளும் பிரதிமைகளும்:
திரிபுவனச்சக்கரவர்த்தி
இராஜராஜ தேவரின் முப்பதாம்
ஆட்சியாண்டில் கன்றாப்பூருடையார் இக்கோயில் மேலைக்திருநட
மாளிகையில் சுப்பிரமணியப்பிள்ளையாரை எழுந்தருளுவித்துள்ளார்.
இம்மன்னனது எட்டாம் ஆட்சியாண்டில் பைய்யூர் நாட்டுப் பைய்யுழான்
பிச்சன் பல்லவராயனான சோழிய பல்லவரையன் இக்கோயில் மேலைத்
திருநடமாளிகையில் பல்லவனீஸ்வரரை எழுந்தருளுவித்த செய்தியை ஒரு
கல்வெட்டுக் கூறுகின்றது.
இக்கோயில்
மேலைத் திருநடமாளிகையில் களரிக்குடையான்
பொன்னம்பலக்கூத்தனான இருமுடிச் சோழ பல்லவரையன் புவனாதிபதி
நாச்சியாரையும், மும்முடி சோழபுரத்து வியாபாரிகளில் செம்பங்குடையான்
திருச்சிற்றம்பலமுடையான் கூத்தாடுநாயனார், இக்கோயிலில் திருஞானம்பெற்ற
பிள்ளையாரையும், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழ தேவர்
காலத்தும் எழுந்தருளுவித்துள்ளனர்.
வைகாசித்திருநாள்:
இக்கோயிலில்
வைகாசி மாதத்தில் திருவிழா நடத்தப்பெற்று வந்தது.
இதை இராஜேந்திர சோழதேவரின் பதினொன்றாம் ஆண்டுக் கல்வெட்டு
உணர்த்துகின்றது. இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள வளநாடு:
அருமொழித்
தேவ வளநாடாகும். அது அளநாடு, ஆர்வலக் கூற்றம்,
இடையளநாடு, இ்ங்காநாடு, மங்கலநாடு, நென்மலிநாடு, புலியூர்நாடு,
புரங்கரம்பைநாடு , தக்களூர்நாடு, வலிவலக்கூற்றம்,
|