பக்கம் எண் :

210தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

சுக்கிரீவன், அநுமன் இவர்கள் வழிப்பட்டுப் பேறுபெற்றதலம். இச்செய்தி,
"நீரிடைத் துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்" எனத் தொடங்கும் இவ்வூரின்
தேவாரத் திருப்பாட்டால்விளங்கும். இதற்குத் திருஞான சம்பந்தர் பதிகம்
ஒன்று இருக்கின்றது. இத்தல புராணம் அச்சிடப் பெற்றுள்ளது. அது சூதவனப்
புராணம் என்ப் பெயர் பெறும். (சூதவனம்=மாமரக்காடு)

     இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் விக்கிரம சோழ தேவர்,
மூன்றாங்குலோத்துங்க சோழ தேவர், மூன்றாம் இராஜேந்திர சோழ தேவர்
ஆகியோர் காலங்களிலும், பாண்டியரில் பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்
காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

     திருவுசாத்தானம் என்பது இவ்வூரின் பழம் பெயராய் இருப்பினும்,
மக்கள் இதைக் கோயிலூர் என்றே வழங்குகின்றனர். இவ்வாறு வழங்கப்
பெறுவதற்கு இவ்வூர்க் கல்வெட்டுக்களில் ஆதாரம் கிடைத்திலது. ஆனால்
முதலாம் இராஜராஜ சோழரின் இருபத்தொன்பதாம் ஆண்டுவரையிற்
பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை இராஜராஜேச்சரத்தில்
இருக்கிறது. அதில் காணப்பெறும் "இந்நாட்டு புறங்கரம்பை நாட்டுக்
கோயிலூர் புதுக்குடியாகிய கோதண்டராமச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார்
இடக்கடவ திருப்பரிசாரகஞ்செய்யும் மாண் ஒன்று1 என்னும் பகுதியால்
கி.பி.1014க்கு முன்னரே கோயிலூர் என்னும் பெயர் இவ்வுசாத்தானத்திற்கு
வழங்கப்பெற்று வந்தது என்பது புலனாகிறது.

     இறைவரின் திருப்பெயர்: இவ்வூர்க் கல்வெட்டுக்களில் சிவபெருமான்
திருவுசாத்தானமுடைய நாயனார், திருவுசாத்தான முடையார் என்னும்
பெயரால் அழைக்கப்பெறுகின்றார்

.      இறைவியின் திருப்பொர்: பெரியநாச்சியார் என்பதாகும். இச் செய்தி
"பிள்ளைப்புரோசைக்குடையார் சாக்கானமான கேரளகுலாசனி சதுர்ப்பேதி
மங்கலத்து உடையார் திருவுசாத்தானமுடைய நாயனார் கோயிலில்
எழுந்தருளுவித்த திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியாருக்கு
அமுதுபடிக்கும் சாத்துபடிக்கும் உடலாக" என்னும் திரிபுவனச் சக்கரவர்த்தி
இராஜராஜ தேவரின் இருபதாம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற
கல்வெட்டுப்பகுதியால்


     1South Indian Insciptions, Volume II part III page 314