பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)01. கோயில்387

திருஞானசம்பந்த சுவாமிகள்
அருளிச் செய்த


தேவாரத் திருப்பதிகங்கள்

மூன்றாம் திருமுறை

1. கோயில்


பதிக வரலாறு:


     திருஞானசம்பந்தசுவாமிகள் திருச்சிற்றம்பலத்தைப் பரவினார், அங்கு
உறைதலை அஞ்சித் திருவேட்களத்தை அடைந்தார்; வணங்கினார்.
திருநெல்வாயிலையும் திருக்கழிப்பாலையும் வழிபட்டு மீண்டு,
திருவேட்களத்தைச் சேர்ந்தார். திருவுடை அந்தணர் மூவாயிரவர் இறைவரது
திருவடிகட்கு அணுக்கராயிருக்கும் பெருவாய்ப்பினை எண்ணி வியந்து
மீண்டும் தில்லைக்கு எழுந்தருளினார். தில்லைவாழந்தணர் எதிரே வந்து
சண்பையந்தணரை வணங்கினர். அவர் வணங்கு முன் அவர்களை
ஆளுடைய பிள்ளையார் வணங்கினார். சிவபிரானருளால், அந்தணர் பலரும்
சிவகணநாதராய்த் திகழ்ந்தனர். நாயனார் அத்திருவருட்காட்சியை நோக்கி
உடனிருந்த திருப்பெரும் பாணர்க்கும் அப்பரிசு காட்டியருளினார். பின்னர்,
திருக்கோயிலுக்கு ஏகினார். திருமுடிமேற் குவித்த செங்கையுடன்
திருவாயிலுள் புகுந்து, வழிபட்டுப் போற்றிப் பாடியது, “ஆடினாய்
நறுநெய்யொடு பால் தயிர்” என்று தொடங்கும் இத் திருப்பதிகம்.