இசையுடன் பாடுமாறு
வல்லவர் தேவரொடுங் கூடி இன்பம் அடைவர்.
(தி.3ப.6பா.11; தி.3ப.31பா.11; தி.3ப.52பா.11.)
கு-ரை:
நாறுபூம்பொழில் நண்ணிய காழி - மணக்கும் பூக்களையுடைய
சோலை பொருந்திய காழியுள் ஞானசம்பந்தன் ஊறும் இன் தமிழால் -
இனிமை ஊறும் தமிழால், ஏறு தொல் புகழ் ஏந்து - பழமையான மிக்க
புகழைத்தாங்கிய. சிற்றம்பலத்து ஈசனைச் சொன்ன இவை வல்லார்
உயர்ந்தாரொடும் கூடுவர் - உயர்ந்த சிவனடியாரோடுங் கூடும் பேறு
பெறுவர். அடியாரொடு கூடி வணங்குவோர் உள்ளத்தில் இறைவன்
உமாதேவியாரோடும் எழுந்தருள்வானாதலால் இங்ஙனம் கூறியருளினார்.
அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் என்ற
திருவாசகத்தும் காண்க. பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்மறைவல்ல
ஞானசம்பந்தன் உயர்ந்தார் உறை தில்லையுள், புகழ் ஏந்து சிற்றம்பலத்து
ஈசனை, ஊறும் இன்தமிழால், இசையாற் சொன்ன இவை பத்து(ம்) கூறுமாறு
வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவர் என்க. கோயில் முதல் திருப்பதிகத்தின்
8 ஆம் பாடலில் இராவணனையும் 9 ஆம் பாடலில் பிரம விட்டுணுக்
களையும் குறிக்கவில்லை.
திருஞானசம்பந்தர்
புராணம்
அண்ண லார்தமக் களித்தமெய்ஞ் ஞானமே
யானஅம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழும் ஆனந்த
ஒருபெருந் தணிக்கூத்துங்
கண்ணின் முன்புறக் கண்டுகும் பிட்டெழுங்
களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர் போற்றுவார்
புனிதரா டியபொற்பு.
உணர்வின் நேர்பெற வருஞ்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும் எளிவர
அருளினை எனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையே ஏத்தி முன்
எடுத்தசொற் பதிகத்தில்
புணரும் இன்னிசை பாடினர் ஆடினர்
பொழிந்தனர் விழிமாரி.
- சேக்கிழார் |
|