பதிக வரலாறு:
இப்பதிகத்து
ஒவ்வொரு பாசுரத்திலும் முதலிரண்டடி அம்பிகையின்
திருவுருவைச்சிறப்பித்து அவளோடும் உறை வானெனும் பூந்தராயின்
பவ்வகைச்சிறப்புகள் அமைந்த தனிச்சிறப்பு ஈற்றடியில் ஊன்றி உணரத்தக்கது.
பன்னிரண்டு திருப்பெயரையுடைய பதி இது எனக்கூறுகிறது. பிரமபுரம் முதல்
கழுமலம் ஈறாக வரிசையாற் கூறப்படும் தலப்பெயரடைவு கடைப்பிடித்து
வழங்கற்பாற்றென்பதனை ஒன்றிரண்டொரு மூன்றாறுசேர் பதிகள் என்ற
பாசுரத்தான் ஆணை தந்ததாயும், இப்பதிகத்தே இம்முறையைத் தாம்
ஓம்பியதாயும் ஞான சம்பந்தப்பெருமானே அருளிச்செய்கிறார்.
திருக்கடைக்காப்பில் வரும் ஓம்புதன்மையன் என்ற தொடருக்கு இப்
பொருளைத் தவிர வேறு பொருள் சிறவாமையும் அறிக.
திருத்தலத்தின்
சிறப்பு:- பூம்பொழில்கள் சூழ்ந்தது; போர்க்கருவிகளை
யுடைய மதில் சூழ்ந்தது; வானவர் போற்றுவது; புண்ணியர் வாழ்வது;
பொய்யில்லா மறையோர் வாழ்வது; சிவபூசை செய்பவர் வாழ்வது; நீரின்
மிதந்தது எனக் கூறப்படுவது. (தி.12 திருஞா. புராணம். 3)
பண்: காந்தார பஞ்சமம்
ப.தொ.எண்: 260 |
|
பதிக
எண்: 2 |
திருச்சிற்றம்பலம்
2812. |
பந்து
சேர்விர லாள்பவ ளத்துவர் வாயி |
|
னாள்பனி
மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான் |
1.
பொ-ரை: பந்து வந்தணைகின்ற விரல்களையும், பவளம் போன்று
சிவந்த
வாயினையும், குளிர்ந்த முழுமதி போன்ற முகத்தையும், அளவற்ற
புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா தேவியோடு எப்பொருள்கட்கும்
முதல்வராக விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய்
ஆகும். அங்குத்
|