|
வந்து
சேர்விடம் வானவர் எத்திசையுந் |
|
நிறைந்
துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றதுமே. 1 |
2813. |
காவி
யங்கருங் கண்ணி னாள்கனித் |
|
தொண்டை
வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள்
தேவி யும்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே. 2 |
தேவர்கள் எல்லாத்
திசைகளிலும் நிறைந்து, வலம் வந்து, மனத்தால்,
நினைந்து, உடலால், வணங்கி, சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர்.
அத்தலத்தினை நாம் வணங்குவோமாக!
கு-ரை:
பந்துசேர் விரலாள்-பந்து பொருந்திய விரலையுடையவள்.
பந்தணை விரலியும் நீயும் (திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி. 8) பந்தணை
விரலாள் பங்க (வாழாப்பத்து 8) எனத் திருவாசகத்தில் வருதலும் காண்க.
துவர்-செந்நிறம், பவளத்துவர் வாயினாள்-பவளம்போலும் செந்நிறம்
பொருந்திய வாயையுடையவள். பனிமாமதி போன்முகத்து-குளிர்ச்சி
பொருந்திய சிறந்த சந்திரனைப் போன்ற முகத்தையுடைய. அந்தம்
இல்புகழாள்-அளவற்ற புகழையுடையவள். விரலாளும், வாயினாளும் ஆகிய
அந்தமில்புகழாள். அளவில் புகழையுடையவள். உமாதேவியாரோடும்.
ஆதி-சிவனுக்கொருபெயர் ஆதியே ... அருளாயே
ஆதிப்பிரான்-பெயரொட்டு. சத்தியும் சிவமுமாய தன்மை ... வைத்தனன்
அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம் என்பதால் (சித்தியார்
சூ-ம்1-69) அந்தமில் புகழாள் என்றனர். வந்து, சேர்வுஇடம்-
சேர்தலையுடையஇடம். புந்தி செய்து இறைஞ்சி-புந்தி மனம், இறைஞ்சி-
வணங்கி, மனம்கூடாத வழிச் செய்கை பயன்தாராது ஆகலாற் புந்திசெய்து
இறைஞ்சியென்றனர். செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாது
(மணிமேகலை. மலர் வனம்புக்ககாதை -76-77.) எனப் பிறர் கூறுதலும்
காண்க. வானவர் எத்திசையும் நிறைந்து வலஞ்செய்து இறைஞ்சி
மாமலர்பொழி பூந்தராய் என்க. போற்றுதும்-வணங்குவோம்.
2.
பொ-ரை: நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும்,
கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும், ஒளிவீசுகின்ற முத்துப்போன்ற
வெண்மையான பற்களையும், இறகுகளையுடைய பெண்
|