பக்கம் எண் :

404திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2814. பைய ராவரும் அல்குன் மெல்லியல்
       பஞ்சின் நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தைய லாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்


அன்னப்பறவை போன்ற நடையையும், பின்னிய மென்மையான கூந்தலையும்
உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு
இறைவன் எழுந்தருளியுள்ள இடம், மரபுப்படி சீகாழிக்கு வழங்கப்படுகின்ற
பன்னிரு பெயர்களுள் ஆறாவதாகக் கூறப்படுகின்ற திருப்பூந்தராய். தாமரை
மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை ஒத்த அந்தணர்கள் வசிக்கும்
அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக!

     கு-ரை: காவி-நீலோற்பலம், கனித்தொண்டை-தொண்டைக்கனி.
கொவ்வைப்பழம் போன்ற வாய், கதிர்-ஒளி, முத்தம்வெண்நகை-முத்துப்
போன்ற வெள்ளிய பற்கள், தூவியம்பெடை யன்னம்நடை-இறகுகளையுடைய
பெண்ணன்னம்போலும் நடை இவற்றோடு சுரிமென் குழலாள்-சுரிந்த
மெல்லிய கூந்தலையுடையவள். ஆகிய தேவியும் திருமேனியோர் பாகமாய்(ச்
சேர்பதி). ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர்பதி (1+2+3=6) ஆறாவது
திருப்பெயராகப் பொருந்திய பூந்தராயைப் போற்றுவோம். சீகாழிக்குரிய
திருப்பெயர்கள் பன்னிரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக இன்னமுறையாக
வழங்க வேண்டும் என்னும் மரபு உண்டு. அம்முறையினால் ஆறாவதாக
வழங்கப்படுவது திருப்பூந்தராய் என்னும் திருப்பெயராம். அம்முறையைப்
பின்வரும் சான்றுகளால் அறிக. இம்முறையைப் பின்பற்றுக என
இப்பாசுரத்தால் ஆணைதந்தனர் காழியர் பெருமான். “பிரமனூர் வேணுபுரம்
புகலி வெங்குருப் பெருநீர்த்தோணி, புரமன்னு பூந்தராய் பொன்னஞ்சிரபுரம்
புறவஞ்சண்பை, அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங்காதியாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் நாம் பரவும் ஊரே”. (தி.2.
ப.70.) “பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப், பொருவில்
திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன், வருபுறவம் சண்பைநகர் வளர்காழி
கொச்சைவயம். பரவுதிருக்கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்” (தி.12
திருஞானசம். புரா. பா.14). சேர்பதி என்ற தொடரினைத் தேவியும்
திருமேனியோர் பாகமாய்ச் சேர்பதியெனவும் ஈரிடத்தும் இயைக்க.

     3. பொ-ரை: பாம்பின் படம் போன்ற அல்குலையும், பஞ்சு போன்ற
மென்மையான அடியையும், வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும்
உடைய தையலாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக்
கொண்ட எங்கள் இறைவன்