மாலையாகிய இத்திருப்பதிகத்தை
ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப்பெற்று
விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும்
இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.
கு-ரை:
இலைநுனி வேற்படை - இலைபோன்ற நுனியையுடைய
திரிசூலம்; "இலைமலிந்த மூவிலைய சூலத்தினானை" என்புழியும் (திருமறை7)
காண்க. 'விலையுடை அருந்தமிழ்மாலை' இப்பதிகம். தந்தையார் பொருட்டுப்
பொன்பெறுவது. ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் எனப்பாடினமையால்
இங்ஙனம் விலையுடையருந்தமிழ்மாலை எனப்பட்டது.
திருஞானசம்பந்தர்
புராணம்
|
சென்று தேவர்தம்
பிரான்மகிழ் கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார் நீள்நிதி வேண்டினார்க் கீவ
தொன்றும் மற்றிலேன் உன்னடி அல்லதொன் றறியேன்
என்று பேரருள் வினவிய செந்தமிழ் எடுத்தார். |
|
எடுத்த வண்டமிழ்ப்
பதிகநா லடியின்மேல் இருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன் னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார் அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித் தஞ்சலி அளித்தார். |
|
நச்சி இன்தமிழ்
பாடிய ஞானசம் பந்தர்
இச்சை யேபுரிந் தருளிய இறைவர்இன் அருளால்
அச்சி றப்பருள் பூதமுன் விரைந்தகல் பீடத்
துச்சி வைத்தது பசும்பொன்ஆ யிரக்கிழி ஒன்று. |
-சேக்கிழார்.
|
|