பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)05. திருப்பூந்தராய்431

5. திருப்பூந்தராய்

பதிக வரலாறு:

     திருப்புகலியிலிருந்து திருத்தோணியப்பரைத் தொழுது பாடிய விகற்பச் செய்யுள் மாலைகளுள் ஒன்று இத்திருப்பதிகம். ஈரடிமேல் வைப்பு

                      பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்: 263   பதிக எண்: 5

                        திருச்சிற்றம்பலம்

2845. தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
  மிக்க செம்மை விமலன் வியன்கழல்
     சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
     நன்ற தாகிய நம்பன் தானே. 1

2846. புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
  வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
     ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
     மூலம் ஆய முதலவன் தானே. 2

 

     1, பொ-ரை: சிவனை மதியாது தக்கன் செயத் யாகத்தைத்
தகர்த்தவனாகிய, திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த
சிறப்புடைய, இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின்
பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள். அனைத்துயிர்கட்கும்
நன்மையைச் செய்கின்ற, அனைவராலும் விரும்பப்படுகின்ற அச்சிவ
பெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான்.

     கு-ரை: தக்கன் வேள்வி தகர்த்தவனாகிய பூந்தராய் நிமலனது
பெருமை பொருந்திய திருவடிகளை என முதலிரண்டடிக்குக் கூட்டியுரைக்க.
மிக்க செம்மை - மேலான வீட்டு நெறியை அருளும். விமலன் - அமலன்.
தன்னைச்சார்ந்த உயிர்களின் மலத்தை யொழிப்பவன் என்றும், இயல்பாகவே
பாசங்களினின்று நீங்கியவன் என்றும் பொருள்.

     2. பொ-ரை: பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப்பூந்தராய்
என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கி