2847. |
வேந்த
ராய்உல காள விருப்புறின் |
|
பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி உள்கிடச்
சாதி யாவினை யான தானே. 3 |
2848. |
பூசு ரர்தொழு
தேத்திய பூந்தராய் |
|
ஈசன்
சேவடி யேத்தி யிறைஞ்சிடச் |
யுள்ள விகிர்தனான
சிவபெருமானின் திருவடிகளைத் தொழுதலே
இந்நிலவுலகில் உயர்வடைவதை விரும்புபவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும்.
ஏனென்றால் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன்
அச்சிவபெருமானே ஆவான்.
கு-ரை:
புள்ளினம் புகழ்போற்றிய பூந்தராய் - அடியார்கள்
பூந்தராயைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டலைக் கேட்டிருந்த கிளி, பூவை
முதலிய பறவையினங்களும் புகழைப் போற்றுவன ஆயின. "தெள்ளுவாய்மைத்
திருப்பதிகங்கள் பைங்கிள்ளை பாடுவ கேட்பன பூவையே"
3. பொ-ரை:
நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால்
திருப்பூந்தராய் என்னும் தலத்தில எழுந்தருளியுள்ள சிவபெருமானின்
பொன்னார் திருவடிகளை வழிபடுங்கள். மேலும் அத்திருவடிகளை
விதிமுறைப்படி நினைத்து, போற்றித் தியானித்தால் வினைகள் தம்
தொழிலைச் செய்யா. எனவே பிறவி நீங்கு்ம். வீடுபேறு உண்டாகும்.
கு-ரை:
மாந்தரீர் நீங்கள் அரசராகி உலகை ஆளவிரும்பினால்
அதனைப் பூந்தராய் நகர் மேவியவன் பொன்னார் திருவடியே தரும்.
பின்னும் அத்திருவடியை ஆசான் உணர்த்திய முறைப்படி நினைந்து
துதிப்பின் நிட்டை கூட வினையாயினவை தம் தொழிலைச்செய்யா. ஆகவே
பிறவியறும்: வீடு பேறு உண்டாம்: என்பதே வைப்பு அடிகளின் பொருள்.
நினைந்தேத்தல் - "மனத்தொடு வாய்மை மொழிதல்" என்புழிப்
போலக்கொள்க. ஆன -சொல்லுருபு. தான், ஏ; இரண்டும் ஈற்றசை. மேல்
வைப்பு முதலடியில் உள்கிட என்பதற்குச் செயப்படு பொருள் - பொற்கழல்.
இங்ஙனம் இருவாக்கியங்களாகக் கொள்ளாத இடத்து வினை முடிவு
காண்டல் அரிது:
4.
பொ-ரை: இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக்
கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய்
|