பக்கம் எண் :

448திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2871. சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித
       கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழு
     நாதனும்
பூமல்கு தண்பொழின் மன்னுமந் தண்புக
     லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ
     கனன்றே. 5

2872. இரவிடை யொள்ளெரி யாடினா னும்இமை
       யோர்தொழச்
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ
     லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக
     லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தவழ
     கனன்றே. 6


     5. பொ-ரை: நல்ல சாமவேதத்தை அருளியவனும், சிவனை
நினையாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும், நூறாயிரம்
திருநாமங்களைச் சொல்லித் தேவர்களும் அருச்சித்து வணங்கும் தலைவனும்,
பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் நிலைபெற்றிருக்கும் அழகும்,
குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில் அழகிய இளம்பெண்ணாகிய
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவபெருமானேயாவான்.

     கு-ரை: சாமவேதம் பாடினவனும், தக்கன் வேள்வியை அழித்தவனும்,
லட்சம்பெயர் சொல்லித் தேவர் அருச்சித்துப் பூசிக்கும் தலைவனும்,
(கோமளமாது) இளம்பெண்ணாகிய உமாதேவியோடுங்கூடித் திருப்புகலியில்
எழுந்தருளியிருப்பவனேயாவான்.

     6. பொ-ரை: மகாசங்காரம் என்று சொல்லப்படும் நள்ளிரவில்
ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும், தேவர்கள் தொழுது வேண்டப் போர்
முகத்தில் முப்புரங்களைத் தீப்பற்றி எரியும்படி செய்த சிவலோகநாதனும்,
இடபவாகனத்தில் உகந்து ஏறியவனும், திருப்புகலி நகரில்