| 2873. |
சேர்ப்பது
திண்சிலை மேவினா னுந்திகழ் |
| |
பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள்
விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக
லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர
மனன்றே 7 |
பாம்புபோன்ற இடையினையுடைய
உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
அழகிய சிவபெருமானேயாவான்.
கு-ரை:
மகா சங்கார காலம் 'இரவு' எனப்பட்டது, சூரிய சந்திரர்,
உடுக்கள் இவையெல்லாம் அழிந்துபட்டமையின். இப்பதிகம் 2-ஆம்
பாடலைப்பார்க்க. மகா சங்கார காலத்தில் நெருப்பில் ஆடினவனும்,
தேவர்கள் தொழுது வேண்டப் போர்முகத்தில் முப்புரத்தைத் தீயால் எரியச்
செய்தவனும், விடையை விரும்பி ஏறினவனும், திருப்புகலியின் கண்ணே,
பாம்பு போலும் இடையையுடைய உமாதேவியோடும் எழுந்தருளினவனும்
இவனேயாவன். அப்பர் பெருமான் திருவாக்கில் வருதலும் காண்க.
7. பொ-ரை:
திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிடமாகக்
கொண்டவனும், பாலனான மார்க்கண்டேயர் மீது சினம் கொண்டு வந்த
கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும், வேள்விப் புகையால் மூடப்பட்ட
அழகிய மாடங்கள் ஓங்கும் திருப்புகலி நகரில் உமாதேவியோடு
வீற்றிருந்தருள்பவனும் எல்லோருக்கும் மேலானவனான சிவபெருமானே
யாவான்.
கு-ரை:
சேருமிடம் திண்ணிய கைலை மலையாகத் தங்கினவனும்,
மார்க்கண்டர்மீது கோபித்தலைச் செய்து வந்து கொடிய யமனை
உதைத்தவனும், திருப்புகலியில் மலையரையன் மகளோடும் எழுந்தருளிய
பெருமானும் ஆவான். சேர்ப்பது என்ற சொல்லில் "அது" பகுதிப்பொருள்
விகுதி.
|