பக்கம் எண் :

450திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2874. கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர்
       கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச
     யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக
     லிந்நகர்
அன்னமன் னந்நடை மங்கையொ டும்அமர்ந்
     தானன்றே. 8

2875. பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர்
       புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி யதழற்
     சோதியும்
புன்னைபொன் றாதுதிர் மல்குமந் தண்புக
     லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம
     லனன்றே. 9


     8. பொ-ரை: கல் போன்று திண்ணிய நெடிய பெரிய திருக்கயிலை
மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர் செய்தானும், வில்லேந்திப்
போர்புரியும் வீரமுடைய வேட்டுவ வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு ஒரு
பொன்மயமான பாசுபதம் என்ற அம்பைக் கொடுத்தவனும், அழகிய
குளிர்ச்சியான திருப்புகலி நகரில் அன்னம் போன்ற நடையையுடைய
உமாதேவியோடு வீற்றிருந்து அருளுபவனான சிவபெருமானேயாவான்.

     கு-ரை: கல்லைப்போலும் திண்ணிய நெடிய பெரிய வெள்ளி
மலையின்கீழ் இராவணன் துன்பம் கண்டு அருளியவனும்; வேடனாகி
விசயனுக்குப் பொன்மயமான பாசுபதமென்னும் அம்பைக் கொடுத்தவனும்,
திருப்புகலியுள் அன்னம் அனைய நடையையுடைய உமாதேவியாரோடும்
வீற்றிருந்தருளிய பெருமானும் அவனே ஆவான்.

     9. பொ-ரை: பொன்னிறப் பிரமனும், பச்சைநிறத் திருமாலும் என்ற
இவர்கள் அடிமுடி காணப் புகுந்தபோது தன்னை இன்னானெனக்
காண்பதற்கியலாதபடி அழற்பிழம்பாய் நின்ற பெருமான்,