பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)07. திருப்புகலி451

2876. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப்
       பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச்
     சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக
     லிந்நகர்
வண்டமர் கோதையோ டும்மிருந் தமண
     வாளனே. 10


புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்க அழகிய,
குளிர்ச்சியான திருப்புகலி நகரில் மின்னல் போன்ற இடையையுடைய
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய சிவபெருமானேயாவான்.

     கு-ரை: பிரமனும் திருமாலும் இன்னானென்று தன்னைக் கண்டற
ியாதபடி தழல் சோதியானவனும், மின்னல் போன்ற இடையையுடைய
உமாதேவியாரோடும் திருப்புகலியுள் எழுந்தருளிய பெருமானும்
இவனேயாவான். 'எண்ணுங்காலும் அது அதன் பண்பே' யென்ற
தொல்காப்பியப்படி பொன்னிற (நான்முக)ன் - பச்சையன் என்று
சொல்லப்பட்டனர்.

     10. பொ-ரை: அசோக மரத்தையும், அரசமரத்தையும் போற்றும்
சமணர்கள், புத்தர்கள், சொல்லும் உரைகளைப் போற்றாது ஒப்பற்ற
தொண்டர்கள் பக்தியுடன் வழிபாடு செய்கின்ற சோதிச் சுடராய் ஒளிரும்
இறைவன் தாமரைகள் மலரும் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலி நகரில்
வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியோடு எழுந்தருளியுள்ள
மணவாளனான சிவபெருமானேயாவான்.

     கு-ரை: பிண்டி - அசோகமரம்; தங்கள் கடவுள் அதனடியில்
இருப்பானென்று அதனைப் போற்றுவர். போதி - அரசமரம். தங்கள்
தலைமகன் அதனடியில் இருந்து ஞானம்வரப் பெற்றானென்று புத்தர்
அதனைப் போற்றுவர்.