பக்கம் எண் :

454திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2879. எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு
       தேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந்
     தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட
     வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர
     னல்லனே. 2.

2880. நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர்
       போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு
     வேறியும்
காதலர் தண்கட வூரினா னுங்கலந்
     தேத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தர
     னல்லனே. 3.


     2. பொ-ரை: நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி
உடையவனும், வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும்,சிறந்த
கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன்
வழிபட, அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால்
உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில் மேன்மேலும் பெருகுகின்ற
பழம்புகழுடைய திருவீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ?

     கு-ரை: எரிதருவார் சடையானும்-நெருப்புப் போன்ற செந்நிறம்
பொருந்திய நெடிய சடையையுடையவனும். எருது ஏறி-எருது ஏறினவன்.
கரிதருகாலன்-கரிய நிறத்தையுடைய இயமன்; சிவனடியார்க்குத் தீமை
செய்பவனுக்கு இந்தக் கதிதான் என்று கரி(சாட்சி) யானவன் எனலுமாம்.
கடவூர்-இயமனை வீட்டிய வீரஸ்தானம் ஆகையால் காலனைச் சாடினானும்
என வரலாறு குறித்தது.

     3. பொ-ரை: எல்லா உலகங்கட்கும் தலைவனும், மகாசங்கார
காலத்தில் நடனம் புரிபவனும், அடியவர்களின் இதயத்தாமரையில்
வீற்றிருப்பவனும், புலித்தோலாடை உடையவனும், இடபவாகனனும்,
அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு