| 2881. |
மழுவமர்
செல்வனும் மாசிலாதபல |
| |
பூதமுன்
முழவொலி யாழ்குழன் மொந்தைகொட்டமுது
காட்டிடைக்
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட
வூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர
னல்லனே. 4 |
| 2882. |
சுடர்மணிச்
சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் |
| |
வாயதோர்
படமணி நாகம் ரைக்கசைத் தபர
மேட்டியும் |
பவனுமான இறைவன் யாவரும்
வணங்குமாறு வேதத்தை அருளிச் செய்த
வீரட்டானத்து அரன் அல்லனோ?
கு-ரை:நளிர்போதின்
கண் பாதனும்-அடியார்களின் குளிர்ந்த தாமரை
(இருதய) மலரின்கண் தங்கும் திருவடியையுடையவனும், காதலர்-அன்பர்கள்
வசிக்கும். தண்-குளிர்ச்சி பொருந்திய, கடவூரினானும்-திருக் கடவூரில்
எழுந்தருளியிருப்பவனும்.
4. பொ-ரை: மழுப்படையேந்திய செல்வனும்,
குற்றமில்லாத பல
பூதகணங்கள் முரசு ஒலிக்க, யாழும் குழலும் இசைக்க, மொந்தை என்னும்
வாத்தியம் கொட்ட, சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு
வளைத்து ஆடும் பெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த
வீரட்டானத்து அரன் அல்லனோ?
கு-ரை:மழு
அமர் செல்வனும்-மழுவை விரும்பி (யேந்தி)ய செல்வனும்,
மொந்தை-ஒருவகை வாத்தியம். முழவொலி யாழ் குழல் மொந்தை
கொட்ட-முழவொலியும் யாழ் ஒலியும் குழல் ஒலியும் ஆகிய இவற்றோடு
மொந்தை கொட்ட, குழல் ஒலி என்னுந் தொடரிலுள்ள ஒலி யென்ற
சொல்லை, யாழ், குழல் என்பவற்றோடும் கூட்டுக.
5.
பொ-ரை:சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம்
அணிந்துள்ளவனும், வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள
|