பக்கம் எண் :

456திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கடமணி மாவுரித் தோலினா னுங்கட
       வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர
     னல்லனே. 5

2883. பண்பொலி நான்மறை பாடியா டிப்பல
       வூர்கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி
     மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட
     வூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர
     னல்லனே. 6


வனும், அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள
கடவுளும், மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும்,
திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும்
வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ? விடமணிகண்டன்-
“நீலமணி மிடற்று ஒருவன் போல” (ஒளவையார், புறநானூறு) நினைவுகூர்க.

     கு-ரை:சுடர்மணி-ஒளிர்கின்ற உருத்திராக்க மணி, சுழல்வு ஆயது ஓர்
படம் மணிநாகம் அரைக்கு அசைத்த-மண்டலம் இடுகிறதாகிய ஒரு பாம்பை
இடுப்பிற் கட்டிய. கடம் அணி-மா மதத்தையுடைய அழகிய யானை.

     6. பொ-ரை: நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும்,
நடனம் ஆடுபவனும், பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில்
பிச்சையேற்றுத் திரிபவனும், நெற்றிக் கண்ணை உடையவனும், வானில்
ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும்,
திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்து
அரன் அல்லனோ?

     கு-ரை: உழல்வான்-சுற்றித்திரிவான். கண்பொலி நெற்றி வெண்
திங்களான்-கண் விளங்குகின்ற நெற்றியின்மீது வெள்ளிய சந்திரனை
அணிந்தவன். வெண்பொடி பூசி-வெண்மையான திருநீற்றைப் பூசியவன்.