| 
             திருவடிமலர்கட்கு 
        முப்பொறித்தூய்மையொடு கூடிய அடியேன் வணக்கம் உரியது.
       இத் 
        திருமுறையில் உள்ள குறிப்புரையை எழுதியவர் திருவாளர். பண்டித அ. கந்தசாமிப்பிள்ளை ஆவார். அவர் வழிவழி வந்த தமிழ்ப்புலவர்.
 சைவப்பற்று மிக்கவர். சிவபூசை புரிபவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்துப்
 பண்டித பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர். அவரது புலமைத் திறத்தை
 இதிலுள்ள குறிப்புரைகளால் அறியலாம். அவர், ஓராண்டு,
 இத்திருத்தருமையில் வாழ்ந்திருந்து இத்திருமுறைத் தொண்டு புரிந்தார், நம்
 ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் திருவுளக் கருணைக்கு
 உரியவராயிருந்து, குறிப்புரை எழுதி உதவிய அவர்கட்கு ஆதீனத்தின்
 நன்றியும் குருவருள் வாழ்த்தும் உரியன ஆகும்.
       தல 
        வரலாறும், கல்வெட்டுச் செய்தியும் எழுதி உதவியவர் வித்துவான் திருவாரூர். வை. சுந்தரேச வாண்டையார் ஆவார். அவர் இவ்வாதீனத்திற்குத்
 தொண்டுபூண்ட புலவர் கூட்டத்துள் ஒருவர். அன்பு பொங்கி வழியும் இன்ப
 நெஞ்சினர். குருவருளால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதருமைப் பல்கலைக்கல்லூரி ஆசிரியர்கள்
 வித்துவான் திரு. சொ. சிங்காரவேலு அவர்களுக்கும், வித்துவான்
 திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்களுக்கும், அச்சுப்பிழை திருத்தம்
 முதலியவற்றில் பெரிதும் உதவி புரிந்த தருமைப் பல்கலைக் கல்லூரி
 முதல்வர் திரு. கீ. இராமலிங்க முதலியார் எம். ஏ., அவர்களுக்கும், வட
 மொழிப் பேராசிரியர் சிரோமணி பிர்மஸ்ரீ கே. இராஜகோபால சாஸ்திரிகள்
 அவர்களுக்கும், தருமைத் தமிழ் உயர்பள்ளித் தமிழ் ஆசிரியர்,
 வடமொழிச்சிரோமணி, தென்மொழி வித்துவான் திரு. வி. சபேசன்
 அவர்களுக்கும் ஸ்ரீ சொக்கலிங்கப்பெருமான் திருவருளும் தருமைக்
 குருவருளும் என்றும் இன்பம் பெருகத் துணை செய்க.
 
       வாழ்க 
        திருநெறிய தமிழ்!  தருமை ஆதீனம்,                        அடியார்க்கு 
        அடியன்,11-6-1955.                              முத்து. சு. மாணிக்கவாசகன்.
 |