| 
             நல்லோர்க்கு 
        விளங்கும் ஞானநன்னெறி. முன்னெறி சரியை, செந்நெறி கிரியை, ஒளிநெறி யோகம், திருநெறி ஞானம் எனக் கொள்ளவும் திருமுறைச்
 சான்றுகள் இருக்கின்றன. திருநெறி அருளே கண்ணாச் செல்நெறி
 என்றருளினார் உமாபதிசிவாசாரியார்.
       திருநெறியதமிழ் 
        வல்லவர் தொல்வினை தீர்தல் எளிது ஆம். இங்குத் தமிழ் திருப்பதிகத்தைக் குறிக்கும். இவ்வாறே ஏனையவற்றிலும் உணர்க.
 நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தன் என்றால் தமிழ்
 எது?
       திருஞானசம்பந்தர் 
        அருளிய திருமுறைகளுள் முதலாவது, வித்துவான், திரு. ச. தண்டபாணி தேசிகர் எழுதிய குறிப்புரையுடன் ஆதீன வெளியீடாக
 முதலில் வந்தது. இரண்டாவது அடியேன் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்பு
 முதலியவற்றுடன் வெளிவந்தது.
       இம் 
        மூன்றாவது திருமுறை திரு. பண்டித அ.கந்தசாமிப் பிள்ளை எழுதிய குறிப்புரையுடையதாயும், அவ்விரண்டையும் போலத் தலங்களின்
 வரலாற்றுக் குறிப்பு, கல்வெட்டுச் செய்திகள் முதலியவற்றைக் கொண்டதாயும்
 தமிழுலகிற்குக் கிடைக்கின்றது.
       திருமுறைகளுக்கு 
        உரை எழுதலாகாது என்று பாடிய காலம் போயிற்று. இக்காலச் சைவமக்களுணர்ச்சியின் நிலையை நோக்கி உரையுடன் விளங்க
 வேண்டும் என்ற பேரிரக்கம், இத் தருமையாதீனத்து 25 ஆவது
 குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய
 சுவாமிகள் அவர்கள் திருவுள்ளத்தில் எழுந்தது. அப்பேரிரக்கத்தின் ஒரு
 சிறிதே இம் மூன்று திருமுறைகளின் உரைவடிவம் ஆகி, சைவ மக்களுக்கும்
 சமயவுணர்ச்சியிற் பொதுமை தவிராத ஏனைய மக்களுக்கும் மிக்க பயன்
 விளைக்கின்றது. விளைத்ததால் இவ்வுலகம், அவர்கள் திருவடிகளை
 மறவாமல் போற்றும் கடமைக்கு உரியதாகும்.
       இனி, 
        திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருமுறைகள் முதலியனவும் இம்முறையில் வெளிவரும் என்று ஆலவாய்ச் சொக்கலிங்கப்பெருமான்
 திருவருளையும் தருமைக் குருவருளையும் இடைவிடாமல் எண்ணிப் போற்றி
 வாழ்த்திவருகின்றேன்.
       இவ் 
        வெளியீட்டின் பாராட்டுரையை அருளியதற்கு, திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி மகாசந்திதானம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி
 அருணாசலதேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள்
 |