பக்கம் எண் :

44முதல் பதிப்பின் முகவுரை 

                           உ
                        சிவமயம்

                      திருச்சிற்றம்பலம்


                  முதல் பதிப்பின் முகவுரை

     இது ‘திருநெறிய தமிழ்’. திரு என்பது ‘திருவே என் செல்வமே
தேனே’ என்பதில் சிவபிரானையும், ‘திருவொளி காணிய பேதுறுகின்ற
திசைமுகன்’ என்பதில் திருவருளையும், ‘சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்’
என்பதில், பேரின்பத்தையும் குறிக்கின்றது. ‘திருவொடும் அகலாதே
அருந்துணைவனாய் ஆண்டுகொண்டருளிய அற்புதம் அறியேனே’ எனத்
திருவருளையும், ‘என் உளம்புகுந்த திருவந்தவாபாடித் தெள்ளேணம்
கொட்டாமோ’ எனச் சிவபிரானையும், ‘அடியோம் திருவைப் பரவி நாம்
தெள்ளேணம் கொட்டாமோ’ என அம்மூன்றையும் குறித்தல் ஆளுடைய
அடிகள் திருவாசகத்தாலும் அறியலாம்.

     ‘செப்பரிய அயனொடுமால் சிந்தித்தும் தெரிவரிய அப்பெரிய திரு’
‘சென்றடையாத திரு’ என்றமையால், திருநெறி என்பது சிவநெறி, அருள்நெறி,
பேரின்பநெறி என்ற பொருள் பயப்பதாகும். திருவடி, திருவருள்
முதலியவற்றை இருபெயரொட்டாகக் கொள்வதே பொருத்தம். திருவாரூர்,
திருநள்ளாறு முதலியவற்றைப் போலக் கொள்ளல் பொருந்தாது.

     துன்பம் அற, அழியாத இன்பம் உறச் செல்லும் வழியையும்,
அவ்வழியின் ஒழுகும் ஒழுக்கத்தையும், அவ்வொழுக்கத்தின் நீங்காத
நீதியையும் நெறி என்பர். மார்க்கம், சமயம், மதம் என்ற பொருளிலே
‘நெறி’ என்ற பெயர் ஆளப்படுகின்றது.

     நெறி பல, அவற்றுள், வேதநெறியும் ஆகமநெறியுமே சிறந்த நெறி.
அவ்விரண்டும் முறையே பொதுவும் சிறப்பும் ஆகும். பொதுநெறியாதலின்
‘வேதநெறி தழைத்தோங்க’ என்றும், சிறப்புநெறியாதலின் ‘மிகு சைவத் துறை
விளங்க’ என்றும், அன்பே சிவமாதலின், ‘பூதபரம்பரை பொலிய’ என்றும்
அருளினார் சேக்கிழார் பெருமானார்.

     திருநெறி சரியை கிரியை யோகம் மூன்றும் அநுட்டித்துவந்த