| பதிக 
        வரலாறு:     	5 ஆம் பதிகம் பார்க்க.           
        பண்: காந்தார பஞ்சமம்     
	 
         
          | 2932. | மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந் |   
          |  | துன்னிய 
            புரமுகச் சுளித்த தொன்மையர் புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
 அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.         1
 |  
         
          | 2933. | மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை 
 |   
          |  | வேதணி 
            சரத்தினால் வீட்டி னாரவர் போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்த்
 தாதணி குழலுமை தலைவர் காண்மினே.         2
 |                     திருச்சிற்றம்பலம் 
          
       1. 
        பொ-ரை: மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான
 சிவபெருமான், புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய
 பூந்தராய் நகரில், அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப்
 பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        மின் அன்ன எயிறுஉடை விரவலோர்கள் தம் - மின்னலைப் போன்ற பற்களையுடைய பகைவர்களாகிய அசுரர்களின் துன்னியபுரம்.
 உகச்சுளிந்த தொன்மையர் - நெருங்கியபுரம் (மூன்றும்) அழியும்படி,
 கோபித்தருளிய பழமையானவர். புன்னையம்பொழில்-புன்னை
 மரச்சோலைகளின் அழகுடைய பூந்தராய் நகரில் எழுந்தருளியிருப்பவர்
 -அரிவை பங்கரே, 
        புரம் உகச் சுளிந்த தொன்மையரே, திருப்பூந்தராய்
 எழுந்தருளிய கடவுள் ஆவர். விரவலோர்-ஆர்விகுதி ஓர் என ஆயிற்று.
 சுளிதல்-கோபித்தல்.
       2. 
        பொ-ரை: பழமையான அணிவகுப்பையுடைய முப்புரத்திலிருந்த அளவற்ற அசுரர்களை வெம்மையுடைய அம்பினால்
 |