பக்கம் எண் :

498திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

     ஒவ்வொரு பாசுரத்திலும் திரிபுரத்தை எரித்தவர், பூந்தராய் நகரில்
வீற்றிருக்கும் உமாபதி என்று கூறிவந்து, திருக்கடைக் காப்பிலும் புரம்
எரிசெய்தவர் பூந்தராய் நகர் பரமலிகுழலுமை நங்கை பங்கரைப் பரவிய
பந்தன் மெய்ப்பாடல் வல்லவர், சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே
எனத் தொகுத்துக் கூறியிருப்பது இப்பதிகத்துக்குரிய சிறப்பியல்பு.

மும்மணிக் கோவை

தனமலி கமலத் திருவெனுஞ் செல்வி
விருப்பொடு திளைக்கும் வீயா இன்பத்
தாடக மாடம் நீடுதென் புகலிக்
காமரு கவினார் கவுணியர் தலைவ
பொற்பமர் தோள நற்றமிழ் விரக
மலைமகள் புதல்வ கலைபயில் நாவ நினாது
பொங்கொளி மார்பில் தங்கிய திருநீ
றாதரித் திறைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலிற்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே.

 

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனுந் தோற்றோணி கண்டீர்-நிறைஉலகிற்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
 
ஞானந் திரளையி லேஉண் டனையென்று நாடறியச்
சோனந் தருகுழ லார்சொல் லிடாமுன் சுரும்புகட்குப்
பானந் தருபங்க யத்தார் கொடுபடைச் சால்வழியே
கூனந் துருள்வயல் சூழ்காழி மேவிய கொற்றவனே.

                        -நம்பியாண்டார் நம்பி