பதிக வரலாறு:
திருப்பாச்சிலாச்சிராமத்தில்
அம்மையப்பரை வணங்கி, அங்கிருந்து
கும்பிடுங் கொள்கையை மேற்கொண்ட திருஞான சம்பந்தர் பிற
சிவத்தலங்களைப் போற்றி ஏத்தித் திருப்பைஞ்ஞீலியைச் சேர்ந்து
சிவபெருமானைப் பாடிய பண்பரவும் தமிழ் மாலை இத் திருப்பதிகம்.
பண்:
காந்தார பஞ்சமம்
2943. |
ஆரிடம்
பாடி ரடிகள் காடலால் |
|
ஓரிடங்
குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே. 1
|
2944. |
மருவிலார்
திரிபுர மெரிய மால்வரை |
|
பருவிலாக்
குனித்தபைஞ் ஞீலி மேவலான் |
திருச்சிற்றம்பலம்
1.
பொ-ரை: சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச்
செய்தவர். வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர்.
அணிவது கோவண ஆடை. சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர்.
இடபவாகனத்தில் ஏறியவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று
பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
ஆரிடம்-இருடிகளுக்கு அருளிய நூலாகிய வேதத்தை.
பாடிலர்-பாடலாகவுடையவர். காடு அலால்-புறங்காடு அல்லாமல். ஓர்
இடம் இலர்-ஓர் இடம் குறை இலர். அதனால் ஒரு குறைவும் இல்லாதவர்.
நீர் இடம் சடை-தண்ணீர் இருக்கும் இடம் சடை; பாரிடம்-பூதம்; பாடுவது.
வேதம், தங்குவதும் புறங்காடு. வேலை செய்வது பூதம். அத்தகையார்
வீற்றிருப்பது திருப்பைஞ்ஞீலியாகும் என்பது. பயிலல், முதல்
நிலைத் தொழிற்பெயர்.
2.
பொ-ரை: பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து
|