பக்கம் எண் :

500திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத்
திருவிலா ரவர்களைத் தெருட்ட லாகுமே.       2
 

2945. அஞ்சுரும் பணிமல ரமுத மாந்தித்தேன்
  பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே.       3


சாம்பலாகுமாறு மேரு என்னும் பெருமையுடைய மலையினை வில்லாக
வளைத்த சிவபெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றான். இத்தகைய வடிவமுடையவன் அவன் என்று
வரையறை செய்து உணர்த்த இயலாத அப்பெருமானுடைய பெருமையை
உணராதவர் அவனருளைப் பெறாதவர். அவர்களின் அறிவைத்
தெளிவித்தல் இயலுமா?

     கு-ரை: மருவிலார் - பகைவர். பரு வில் ஆ-பருத்த வில்லாதலின்.
குனிதல்-வளைதல். பைஞ்ஞீலிமேவலான்-திருப்பைஞ்ஞீலியில்
மேவுதலையுடையவன். உருஇலான்-வடிவமில்லாதவன். அவன்
பெருமையையுணர்பவர் திருவுடையவர். உணர்கிலாதவர்; திருவிலாதவர்.
அவர்களை அறிவுரை கூறித்தெளிவிக்க இயலாது என்பது பாசுரத்தின்
இறுதிப் பகுதியின் பொருள். உருவிலான்-சிவனுக்கு ஒரு பெயர்.
உளங்கொளல்-உணர்தல்.

     3. பொ-ரை: அழகிய வண்டு மலரை அடைந்து தேனைக் குடித்துப்
பஞ்சுரம் என்னும் பண்ணைப் பாடுகின்ற திருப்பைஞ்ஞீலி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், வெப்பம் மிகுந்த காட்டில் உமாதேவி
அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன்.

     கு-ரை: அம் சுரும்பு அணிமலர் அமுதம் மாந்தித் தேன் பஞ்சுரம்
பயிற்று பைஞ்ஞீலி-அழகிய சுரும்பு என்னும் சாதி வண்டினம் மலரை
அடைந்து தேனைக்குடித்துத் தேன் என்னும் சாதிவண்டினங்களுக்குப்
பஞ்சுரம் என்னும் பண்ணைப்பாடிப் பழக்கும் திருப்பைஞ்ஞீலி.
வெம்சுரம்-வெப்பமாகிய காடு. மேவலான். மேவல் ஆன் -
தங்குதலையுடையவன். கொள்கையே; இங்கு என்னே என்னும் பயனிலை
அவாய்நிலையாற் கூறி முடிந்தது.