| 
         
          |  | வேதியர் 
            பரவுவெண் காடு மேவிய ஆதியை யடிதொழ அல்லல் இல்லையே.        10
 |  
         
          | 2964. | நல்லவர் 
            புகலியுள் ஞான சம்பந்தன் |   
          |  | செல்வன்எம் 
            சிவனுறை திருவெண் காட்டின்மேற் சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
 அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.      11
 |  திருச்சிற்றம்பலம்
       
  இல்லாமையால் அவற்றை 
        நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர். எனவே அவர்களைச் சாராது, வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித்
 துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற
 அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத்
 தொழத் துன்பம் இல்லையாம்.
       கு-ரை: 
        நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்-சைவத்தின் உயர்வு முதலிய நீதிகளை எடுத்துரைத்தலும் நல்லூழ் இன்மையால் அவற்றை
 நினைத்துப் பார்த்தலும் செய்யாதார்.
       11. 
        பொ-ரை: பசுபுண்ணியம், பதிபுண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன், செல்வனாகிய
 எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய
 அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய
 துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது
 நமது ஆணையாகும்.
       கு-ரை: 
        பிறவித் துன்பங்கள் அவற்றிற்கு மூலகாரணமான தொலைத்தற்கரிய வினைகளோடும் விட்டொழியும். நமது ஆணை-மேலும்
 மேலும் வரக்கடவதுடன், வினையால் ஆனமையின் அல்லலோடு
 அருவினையறுதல் ஆணை கூறியருளினார்.
 |