| 
       பதிக வரலாறு:      ஆளுடைய 
        பிள்ளையார் திருவாரூர், திருக்காறாயில், தேவூர், திருநெல்லிக்கா, கைச்சினம் ஆகிய தலங்களைத் தரிசித்து வருங்காலத்தில்
 திருக்கொள்ளிக்காடு போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.
 பண்: 
        காந்தார பஞ்சமம்  
         
          | ப. 
            தொ. எண்: 274 |  | பதிக 
            எண்: 16 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 2965. | நிணம்படு 
            சுடலையி னீறு பூசிநின் |   
          |  | றிணங்குவர் 
            பேய்களோ டிடுவர் மாநடம் உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும்
 குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.      1
 |  
         
          | 2966. | ஆற்றநல் 
            லடியிணை அலர்கொண் டேத்துவான் |   
          |  | சாற்றிய 
            அந்தணன் தகுதி கண்டநாள் |  
       1.பொ-ரை: 
        பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர், உலர்ந்த பிரமகபாலத்தைக்
 கையில் ஏந்திப் பலியேற்று உண்பர். ஆயினும் அப்பெருமான் உயர்ந்த
 குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        சுடலையில் எழும்பிய நீறு பூசிப் பேய்களோடு இணங்குவர். அங்குப் பெரிய கூத்து ஆடுவர். உலர்ந்த மண்டையோட்டில் உண்பர்.
 ஆயின் அவரிடத்தில் என்ன குணம் உளதாவது என்னற்க; உயர்ந்த குணம்
 எல்லாம் உடையர் என்க கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை
 தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி ... காயின் உலகனைத்தும்
 கற்பொடி காண் சாழலோ.
       2.பொ-ரை: 
        நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர்கொண்டு போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள்
 |