|
மாற்றல
னாகிமுன் னடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே 2 |
2967. |
அத்தகு
வானவர்க் காக மால்விடம் |
|
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே. 3 |
2968.
|
பாவண
மேவுசொன் மாலை யிற்பல |
|
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர் |
இறுதியை அறிந்து யாவராலும்
தவிர்க்க முடியாதவனாகி மார்க்கண்டேயனை
நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவர்
திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
நல்ல திருவடிகளை மலர்கொண்டு முற்றப் பூசிப்பவனாய்.
சாற்றிய-அபயம் என்று சொல்லிய. அந்தணன்-மார்க்கண்டேயர். ஆற்ற
ஏத்துவானாய்ச் சாற்றிய அந்தணன் என்க. தகுதி-இறுதி. மாற்றலன்
ஆகி-யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி. வந்து அணை-வந்து அடைந்த.
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடர். மாற்றுதல்-மாற்றேனெனவந்த
கூற்றனை மாற்றி என்று திருவாசகத்திலும் வருதல் காண்க.
3.
பொ-ரை: தாம் வாழ்வான் வேண்டி வணங்கும் வானவர்களைக்
காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய
சிவபெருமான், ஊமத்தம் பூவும், வன்னியும் அணிந்த சடைமுடியில்
கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர். அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
அத்தகு - அப்படிப்பட்ட. மால்விடம்-கொடிய விடத்தை,
மால் என்ற சொல் இங்குக் கொடுமையென்னும் பொருளில் வந்தது.
இப்பொழுது நீலமணி போற்காணப்படுவதாகிய கண்டத்தின் உட்பாகத்தில்
வைத்தவர். மத்தம்-பொன்னூமத்தை. மலிந்த-மிகுதியாக அணியப்பட்ட
கொத்துக் கொத்தாக அலரும் கொன்றையை அணிந்தவர்.
4.
பொ-ரை: யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும்
மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன்
|