|
ஆவணங்
கொண்டெமை யாள்வ ராயினும்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே. 4
|
2969. |
வாரணி வனமுலை மங்கை யாளொடும் |
|
சீரணி
திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லாரெயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே. 5
|
2970. |
பஞ்சுதோய்
மெல்லடிப் பாவை யாளொடும் |
|
மஞ்சுதோய்
கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும் |
நவிலுமாறு செய்தவர்
இறைவர். அவர் உயிர்களாகிய எங்களை அடிமை
கொண்டு ஆள்பவராயினும் கோவண ஆடை உடையவர். அப்பெருமான்
திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
பாவ(ண்)ணம்-பாட்டின் இலக்கணம் (யாப்பு). மேவு-பொருந்திய.
சொல் மாலையில் பல-சொல்லைத் தொடுக்கும் மாலைபோன்ற பாடல்களிற்
பலவற்றை. நாவணம்-நாவிற்குப் பொருந்து விதமாக. கொள்கையின்-விதிப்படி.
நவின்ற-பாடிய. ஆவணம் கொண்டு-அடிமை ஓலை எழுதி. எமை
ஆள்வர்-எங்களையாட்கொள்பவர். ஆயினும், கோவணங்
கொள்கையர்-கோவணம் உடையாகக் கொள்பவர். அத்தகையர்
அடியோங்களுக்கு யாது தரற்பாலர் என்பது குறிப்பெச்சம்.
5.
பொ-ரை: கச்சணிந்த அழகிய முலையுடைய உமாதேவியோடு,
சிறந்த அழகிய திருவுருவத்துடன் விளங்கும் சிவபெருமான், நாண் பூட்டிய
மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களாகிய முப்புர அசுரர்களின்
மதில்களை அக்கினியை அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர்.
அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
சீர்அணி திருவுரு - சிறந்த அழகோடு கூடிய திருவுருவம்.
நார் - நாரி, நாணி, நணுகலார் - பகைவர். கூர் எரி - மிக்க நெருப்பு.
கொளுவினார் - பற்றவைத்தார்.
6.
பொ-ரை: செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தை
யுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு, மேகத்தைத்
|