பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)18. திருவைகல்மாடக்கோயில்527

  மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.     6

2993. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
  திரிபுர மெரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே.         7

2994. மலையன இருபது தோளி னான்வலி
  தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்


இடமாவது, மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற
அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், சிற்றரசர்கள்
கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கட்சோழன் என்ற
மாமன்னன் கட்டிய மாடக்கோயில் ஆகும்.

     கு-ரை: நிலவும் நீள்சடை. மூஎரி மறையொடு வளர்வு செய்வாணர் -
மூவகை அக்கினிகளை - வேதத்தினோடு வளர்க்கின்றவர். எரிவாணர் -
அக்கினியில் வாழ்பவர்; வாணர். (வாழ்+க்+அர்) திறை உடை நிறை செல்வன்
- அரசர்கட்டும் கப்பத்தையுடைய நிறைந்த செல்வன்; கோச்செங்கட் சோழ
நாயனார். 7.பொ-ரை: அக்கினியாகிய அம்பை, மேருமலையை நீண்ட
வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை எரியுண்ணுமாறு
செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது,
வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும்
திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி
ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும்.

     கு-ரை: அக்கினியாகிய அம்பை. வரிசிலை வளைய - நீண்ட வில்லை
வளைத்து. ஏவி - செலுத்தி. திரிபுரம் எரி செய்த செல்வர் என்பது
இப்பாடலின் முற்பகுதிக்குப் பொருள். வரிவளையவர் - கீற்றுக்களையுடைய
வளையணிந்த மகளிர். வரும் முகில் அணவிய - படர்ந்து வருகின்ற
மேகங்கள் அளாவிய சோதியாரிடம் மாடக் கோயில்.

     8. பொ-ரை: மலை போன்ற இருபது தோள்களையுடைய இராவணனது
வலிமையை அழித்து, பின்னர் அவன் சாம கானம்