| |
வம்பியல்
சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே. 4 |
| 2991. |
விடமடை மிற்றினர் வேத நாவினர் |
| |
மடமொழி
மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக்கோயிலே. 5 |
| 2992. |
நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை |
| |
இறையவர்
உறைவிடம் இலங்கு மூவெரிப |
சூழ்ந்த திருவைகல்
என்னும் திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட்
சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும்.
கு-ரை:
கொம்பு இயல் கோதை - ஸ்தலத்து அம்பிகையின் பெயர்.
பூங்கொம்பு அசைவதுபோல் நடக்கின்ற அம்பிகை; கோதை - பெண்.
குஞ்சரத்தும்பி - இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை. துங்கர் - மேலானவர்.
வம்பு இயல் - வாசனையையுடைய சோலை சூழ்ந்த தலத்துக்கு
மேற்றிசையிலுள்ள கோயில். அடுத்த பாடலிலும் இக் குறிப்பு வருதல் காண்க.
செம்பியன் - சோழன்.
5.
பொ-ரை: இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து
வைத்துள்ள கண்டத்தினர். வேதங்களை ஓதும் நாவினர். அவர், இனிய
மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியோடு
வீற்றிருந்தருளும் இடம், இள அன்னப்பறவைகள் நடைபயிலும் திருவைகல்
என்னும் பெருநகரின் மேற்குத்திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும்.
கு-ரை:
விடம் அடைமிடற்றினர்-விடந்தங்கிய கழுத்தை யுடையவர்.
வேதம் நாவினர்-வேதத்தைப்பாடும் நாவினை யுடையவர். மடம்மொழி-
குதலைச் சொல்லையுடைய. மலைமகள். மட அனம் - இளம் அன்னப்
பறவைகள். நடைபயில் - மாதர் நடையைப் பழகுகின்ற. நிலவிய -
விளங்குகின்ற, மாடக்கோயில - துங்கர் தங்குமிடம்.
6.
பொ-ரை: புனிதமான கங்கையையும் பிறைச்சந்திரனையும்
அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும்
|