| 2989. |
கணியணி
மலர்கொடு காலை மாலையும் |
| |
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி யுமையொடு தாமும் தங்கிடம்
மணியணி கிளர்வைகன் மாடக் கோயிலே. 3 |
| 2990. |
கொம்பியல்
கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் |
| |
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் |
திருத்தலத்தில் மேற்குத்
திசையில், சிவந்த கண்ணுடைய கோச்செங்கட்சோழ
மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும்.
கு-ரை:
மெய் அகம் - உடம்பினிடத்தில். மிளிரும் - விளங்குகின்ற -
வேதியர்-வேதத்தாற் பிரதிபாதிக்கப்படுபவர். செய்ய கண் வளவன்
-கோச்செங்கண்ணன் என்னும் சோழ அரசர். கோச்செங்கட் சோழ நாயனார்
வரலாற்றை அவர் மாடக்கோயில் எழுபது கோடியமையும் தலவரலாற்றில்
அறிக. கோச் செங்கட்சோழ நாயனார் பெருமையைத் திருநாவுக்கரசு
நாயனார் ஐந்தாம் திருமுறையிலும், ஆறாந் திருமுறையிலும் சுந்தரமூர்த்தி
நாயனார் ஏழாந் திருமுறையிலும் அருளினமை காண்க.
3.
பொ-ரை: வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு
காலையும், மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள்செய்யும் தன்மை
யுடைவர் இறைவர். அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவமாகக் கொண்டு
உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால்
அழகுபடுத்தப்பட்ட திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள
மாடக்கோயிலாகும்.
கு-ரை:
கணி-கண்ணி, அதே குறிக்கோளாகக் கருதி, அணி-அழகிய.
பணி-திருப்பணியாகக்கொண்டு. அணிபவர்க்கு-காலையும் மாலையும்
அணிமலர் கொணர்ந்து அணிபவர்களுக்கு. அருள் செய்த.
பான்மையர்-தன்மையுடையவர். தணி - (தண்+இ) குளிர்ந்த அருள். அணி -
தன் வடிவாகக்கொண்ட உமை. மணி அணிகிளர் -இரத்தினங்களால் அழகு
விளங்குகின்ற வைகலில். மாடக்கோயில், பான்மையர் உமையொடும் தங்கும்
இடம்.
4.
பொ-ரை: பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான உமாதேவி
அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த மேன்மையுடையவனான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நறுமணம் கமழும் சோலைகள்
|