2999. |
மையகண் மலைமகள் பாக மாயிருள் |
|
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே. 2 |
3000. |
மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர் |
|
பிறைபுனை
சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுன னிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே. 3 |
3001. |
இரவுமல் கிளமதி சூடி யீடுயர் |
|
பரவமல்
கருமறை பாடி யாடுவர் |
2.
பொ-ரை: மைபூசிய கண்ணையுடைய மலைமகளான உமாதேவியை
ஒருபாகமாகக் கொண்டு, இருளில், இறைவர் கையில் கனன்று எரிகின்ற
நெருப்பானது சுவாலை வீச, நடனம் ஆடுவார். அப்பெருமானார் கரையை
மோதுகின்ற அரிசிலாற்றினால் நீர்வளமிக்க அழகிய நல்ல அம்பர் மாநகரில்
கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
மையகண் - மையை அணிந்த கண். மைய - குறிப்புப்
பெயரெச்சம். இருள் ... ஆடுவர். இருளில் கையில் உள்ளதாகிய நெருப்பானது
சுவாலை வீச, ஆடுவர். ஐய... அம்பர் - அழகிய நல்ல கரையை மோதும்
(அரிசிலாற்றின்) நீர்வளம் பொருந்திய அம்பர். செய்யகண் - செங்கண்.
இறை - அரசன்.
3.
பொ-ரை: வேதங்களை அருளிப் பாடுகின்ற இறைவர், சுடர்விடு
நெருப்பு கையில் விளங்கவும், பிறைச்சந்திரன் சடைமுடியில் அசையவும்
ஆடுவார். ஒலிக்கின்ற அரிசிலாற்றினால் நீர் நிறைந்த வயல்களையுடைய
அம்பர் மாநகரில், கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய அழகுமிகு
கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
மறை - வேதத்தை. புனைபாடலர் - புனைந்து பாடு
தலையுடையவர். சுடர் - நெருப்பானது. கைமல்க - கையிலே தங்க. அறை -
ஒலிக்கின்ற. இறை - கோச்செங்கட் சோழ நாயனார். புனை - அலங்கரித்துச்
செய்யப்பட்ட. எழில்வளர் - அழகுமிகும், இடம்.
4.
பொ-ரை: இரவில் ஒளிரும் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, தம்
பெருமையின் உயர்வைத் துதிப்பதற்குரிய அருமறைகளை இறைவர்
|