|  
       
             வெறியமான் 
        கரத்தார் - 109-1 
            வெறிய-குறிப்புப்பெயரெச்சம் 
            செற்றினில் 
        மலிபுனல் - 97-5 
            செற்றி-பாத்தி. 
        செறு+இ-இகரம் வினைமுதல் பொருள் விகுதி. 
            இத்தகைய 
        இலக்கணக்குறிப்புகள் பிற்காலத்து இலக்கண நூல்களிலும்  
        உரைகளிலும் இவருக்கு உள்ள புலமையைப் புலப்படுப்பனவாம்.  
      ஈ.நன்னூல் 
            நாம் 
        மனனினில் வர நினைதல் நன்மையே - 21-9 
            மனம்-மனன்-போலி. 
            ஈறுபோதல் 
        விதி - 61-11 
            சிலவிகாரமாம் 
        உயர்திணை - 76-7 
            மெய்விட்டு 
        ஓடும் -84-3 
            அருமை+அணங்கு-ஆரணங்கு 
        - 103-7 
            இன்னோரன்ன 
        குறிப்புக்களால் இவருக்கு நன்னூலிடத்து உள்ள  
        ஈடுபாடு புலப்படும். தொல்காப்பியத்தில் ஈடுபட்டவர்கள் பண்புத் 
        தொகைகளை நிலைமொழி வருமொழி எனப்பிரித்துப் புணர்ப்பதனை ஏலார்.  
        ஆனால் இவர்- 
            ஆரிடம்-அரும்+இடம் 
        - 4-7 
            ஆரழகன்-அரும்+அழகன் 
        - 61-1 
            இளங்கொன்றை-இளம்+கொன்றை 
        - 8-10 
            சுடுநெருப்பு-சுடும்+நெருப்பு 
        - 46-1  
	 |