பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்55

     அருமறை-அரும்+மறை - 66-9, 86-7

     நறுமணம்-நறும்+மணம் - 72-5

     அருநயம்-அரும்+நயம் - 86-7

     இளமருப்பு-இளம்+மருப்பு - 91-2

     என நிலைமொழிகளை மகர ஈற்றனவாகப் பிரித்துப் புணர்ப்பது
இவருடைய நன்னூல் ஈடுபாட்டைப் புலப்படுத்துகிறது.

உ. இவர் தொல்காப்பிய நூற்பாக்களையும் தேவைப்பட்ட இடங்களில்
மேற்கோள் காட்டுகிறார்.

     1. கம்பலை சும்மை கலியே அழுங்கல் உவரி என்றிவை நான்கும்
அரவப்பொருள - 1-4

     2. தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும் - 5-7

     3. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் உவரி ஆவயின் நான்கும்
உள்ளதன் நுணுக்கம் - 10-8

     4. நம்பும் மேவும் நசை யாகும்மே - 12-5, 14-7

     5. மாலை இயல்பு - 53-5

     6. தடவும் கயவும் நளியும் பெருமை - 62-5

     7. கடிஎன் கிளவி...விரையே விளக்கம்...ஆகும்மே - 84-1

     8. வியல் என் கிளவி அகலப்பொருட்டே - 88-4

     9. வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் உவரி நேர்வும் நெடுமையும்
செய்யும் பொருள - 103-9 என்ற உரியியல் நூற்பாக்களைச் சொற்பொருள்
விளக்கத்துக்கு மேற்கோள் காட்டுகிறார்.

     10. ஒருவரைக்கூறும்...வழக்கினாகிய உயர் சொற்கிளவி - 91-8