பக்கம் எண் :

56மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

     11. எண்ணுங்காலும் அது அதன்பண்பே - 99-3

     12. செய்யாய் என்றும் முன்னிலைவினைச்சொல். செய் என்கிளவி ஆகிடன் உடைத்தே - 116-1 என்ற சொல்லதிகார நூற்பாக்களையும்,

     13. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே -11-9

     14. மாவும் மாக்களும் ஐயறி வினவே - 57-10

     15. உயர்ந்ததன் மேற்றே உள்ளூங் காலை - 58-1, 102-6

     என்ற பொருளதிகார நூற்பாக்களையும் இயைபுபற்றிப் பிற இடங்களில்
எடுத்துச் சுட்டியுள்ளார்.

4. சிவபெருமானுடைய திருப்பெயர்கள்

     1, ஆதி-சிவனுக்கு ஒரு பெயர் - 2-1, 108-1

     ஆதியே...அருளாயே.

     2. மணாளன் - 7-3,101-2

     நித்தமணாளர், நிரம்ப அழகியர், மஞ்சா போற்றி, மணாளா போற்றி.

     3. நல்லன் - 10-4, நல்லான் - 49-5

     நல்லானை, நான்மறையோடு ஆறங்கம் வல்லானை.

     4. இணையிலி - 10-6

     இணையிலி தில்லைத்தொல்லோன்

     5. செல்வன் - 12-5

     வெண்ணீறணி செல்வன்

     6. நம்பன் - 12-5, 49-2